MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan Day 6 Box Office : மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்த ஜனநாயகன்

Jana Nayagan Day 6 Box Office : மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்த ஜனநாயகன்

Jana Nayagan Movie Box Office : நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஐந்து நாட்களாக வசூலில் மாஸ் காட்டி வந்த நிலையில், 6ம் நாள் வசூல் கடும் சரிவை சந்தித்து உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 29 2026, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jana Nayagan Movie Day 6 Box Office
Image Credit : Instagram

Jana Nayagan Movie Day 6 Box Office

தளபதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் முதலில் ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சான்றிதழ் தொடர்பான நடைமுறைகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீடு தாமதமானது. இறுதியில் 'A' சான்றிதழ் பெற்று திரையரங்குகளில் வெளியானது.

Jana Nayagan OTT: ஓடிடியில் எங்கு, எப்போது வெளியாகிறது 'ஜன நாயகன்'? ரசிகர்கள் காத்திருக்கும் அப்டேட்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
லீக் சர்ச்சையையும் மீறிய ரசிகர் ஆதரவு
Image Credit : KVN Productions

லீக் சர்ச்சையையும் மீறிய ரசிகர் ஆதரவு

திரைப்படம் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், திரையரங்குகளில் முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால், ஆன்லைன் கசிவு கூட படத்தின் திரையரங்கு வரவேற்பை பாதிக்கவில்லை என்ற கருத்து திரையுலகில் பேசப்பட்டது. படத்தின் திரைக்கதை மற்றும் சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. சிலர் படத்தில் லாஜிக் குறைபாடுகள் இருப்பதாகக் கூறினாலும், விஜய்யின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் எனர்ஜி படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

3 மணி நேரம் பல்லைக் கடிச்சுட்டு பார்த்தேன்! - விஜய் போல் செய்கை செய்து ஜனநாயகன் படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்

Related Articles

Related image1
Jana Nayagan Day 2 Box Office : வசூலில் செஞ்சுரி அடித்த ஜனநாயகன்... 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Related image2
Jana Nayagan Day 5 Box Office : நான் ஸ்டாப் ஆக வசூலை அள்ளும் ஜனநாயகன்... 5ம் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?
34
சாதனை படைத்த ஜனநாயகன்
Image Credit : KVN Productions

சாதனை படைத்த ஜனநாயகன்

விஜய் நடித்த கடைசி திரைப்படம் என்பதால், அவரது ரசிகர்கள் பலரும் படத்தை மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இதனால் ஜனநாயகன் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. விஜய்யின் கெரியரில் 200 கோடி வசூல் அள்ளிய 9-வது படம் என்கிற பெருமையை ஜனநாயகன் பெற்றுள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே தொடர்ச்சியாக ஒன்பது 200 கோடி வசூல் படங்களை கொடுத்த ஒரே ஹீரோ என்கிற பெருமையை தளபதி விஜய் பெற்றுள்ளார். யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாகவும் இது பார்க்கப்படுகிறது.

Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ

44
6 நாட்கள் வசூல் எவ்வளவு?
Image Credit : KVN Productions

6 நாட்கள் வசூல் எவ்வளவு?

Sacnilk வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆறாவது நாளில் இந்தியாவில் மட்டும் 'ஜனநாயகன்' சுமார் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஐந்தாவது நாள் வசூலுடன் ஒப்பிடும்போது சுமார் 19.8 சதவீதம் குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், உலகளவில் திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ.246 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், ரூ.250 கோடி வசூல் என்ற முக்கிய மைல்கல்லை படம் நாளை எட்டும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Jana Nayagan Viral Videos : படம் பார்க்க வந்த த்ரிஷா..கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்! வீடியோ உள்ளே!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
யார் சொன்னா எம்ஜிஆர்னு.?! விஜய் ஒரு சுயம்பு தெரியுமா.?! போட்டுத்தாக்கும் சவுக்கு சங்கர்.!
Recommended image2
Jayamani Passes Away : சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... 'மலேசியா மாமா' நடிகர் ஜெயமணி காலமானார்!
Recommended image3
Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?
Related Stories
Recommended image1
Jana Nayagan Day 2 Box Office : வசூலில் செஞ்சுரி அடித்த ஜனநாயகன்... 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image2
Jana Nayagan Day 5 Box Office : நான் ஸ்டாப் ஆக வசூலை அள்ளும் ஜனநாயகன்... 5ம் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved