- Home
- Cinema
- 3 மணி நேரம் பல்லைக் கடிச்சுட்டு பார்த்தேன்! - விஜய் போல் செய்கை செய்து ஜனநாயகன் படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்
3 மணி நேரம் பல்லைக் கடிச்சுட்டு பார்த்தேன்! - விஜய் போல் செய்கை செய்து ஜனநாயகன் படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்
"ஒரு ரெண்டரை மணி நேரம் கூட பல்லைக் கடிச்சுட்டு ஒரு வழியாக சமாளிச்சு பார்த்தால், கடைசி அரை மணி நேரம் கொடுமையிலும் கொடுமை. படம் எப்போ முடியும்னு ஆயிடுச்சு" என்று ஜனநாயகன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

10 நிமிடத்துக்கு ஒரு மிஷன்!
'மிஷன் இம்பாசிபிள்' படத்தில் டாம் குரூஸ் ஒரு மிஷனை எடுத்து அதை வெற்றிகரமாக முடிப்பார். ஆனால் 'ஜனநாயகன்' படத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு புதிய மிஷன் வருகிறது என்று கிண்டலடித்துள்ளார்.
ஜெயில் பிரச்சனை, ஜெயிலர் குடும்பம், மலைவாசி மக்களின் பிரச்சனை, கள்ளச்சாராயம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பெண்கள் அதிகாரமளித்தல், குழந்தைகள் மீதான வன்முறை, மத நல்லிணக்கம், அரசியல் பிரச்சாரம் என ஏராளமான விஷயங்கள் கதைக்குள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளதாக மாறன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Kala Chakra Parivarthana Yoga : கால சக்ர மாற்ற யோகத்தால் அதகளம் செய்யப்போகும் 3 ராசிகள்!
தெலுங்கு படத்தை தமிழில் எடுக்கவில்லை!
'பகவந்த் கேசரி' படத்தின் மையக் கருத்தை எடுத்திருந்தாலும், அதை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்த விதம் திருப்தி அளிக்கவில்லை என்றும், "தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்திருந்தால் பரவாயில்லை; தெலுங்கு படமாகவே எடுத்திருக்கிறார்கள்" என்றும் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : Fridge : இந்த Temperature-ல் வைத்தால் கரண்ட் பில் குறையும், உணவும் நீண்ட நேரம் ஃபிரெஷ்ஷாக இருக்கும்!
ஹீரோ சோத்துக்கு என்ன பண்றாரு?
படத்தில் நாயகன் எந்த வருமானத்தில் வாழ்கிறார்? அவருடன் சுற்றும் ஆட்கள் என்ன வேலை செய்கிறார்கள்? போன்ற பல லாஜிக் கேள்விகளுக்கும் படத்தில் பதில் இல்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விஜய் படங்களின் மிகப்பெரிய பலமான பாடல்கள் கூட இந்தப் படத்தில் பெரிதாக கவரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Dhana Yoga : ஜூலை 29-க்குப் பிறகு கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டப்போகும் பணம்! 3 ராசிகளுக்கு தனயோகத்தின் ஜாக்பாட் உறுதி!
விஜய் போல் செய்கை செய்து கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
படத்தின் கடைசி அரை மணி நேரத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன், "ஒரு காமன் ஆடியன்ஸாக ஒரு முக்கால் படம் வரை பல்லைக் கடிச்சுட்டு பார்த்துவிடலாம். ஆனால், கடைசி அரை மணி நேரம் இருக்கே... ஏன்டா நான் வேணா அந்த செய்கையை ஒருவாட்டி பண்ணிக்கிட்டுமாடா?" என்று கூறியபடியே, விஜய் போல கை செய்கையை செய்து கிண்டலடித்தார்.
இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : CNG Cars : விலை கம்மி, மைலேஜ் அதிகம்! பட்ஜெட் விலையில் டாப் 7 CNG கார்கள்!
ரசிகர்களுக்கான படமா?
இறுதியாக, "இந்த படம் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காகவும், அவரது அரசியல் கட்சிக்கான பிரச்சாரப் படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கம் நிறைவேறியிருந்தால் அது வெற்றி தான். ஆனால், ஒரு சாதாரண ரசிகராக தியேட்டருக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு இந்த படம் திருப்தி அளிக்காது" என்றும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

