MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • CNG Cars : விலை கம்மி, மைலேஜ் அதிகம்! பட்ஜெட் விலையில் டாப் 7 CNG கார்கள்!

CNG Cars : விலை கம்மி, மைலேஜ் அதிகம்! பட்ஜெட் விலையில் டாப் 7 CNG கார்கள்!

CNG Cars : சிங்கிள் சிலிண்டர் CNG காரை விட டூயல் சிலிண்டர் CNG கார் ஏன் சிறந்தது? இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற டூயல் சிலிண்டர் கார் மாடல்கள் என்னென்ன இருக்குனு இங்க பார்க்கலாம்.

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 23 2026, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Top 7 Budget friendly CNG cars with best mileage in India
Image Credit : Chatgpt

Top 7 Budget friendly CNG cars with best mileage in India

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே இருக்கு. இதனால, நிறைய பேர் கம்மி செலவுல அதிக தூரம் போறதுக்கு வழிய தேடுறாங்க. அதுக்கு CNG கார்கள்தான் சரியான சாய்ஸ். மெயின்டனன்ஸ் செலவும் குறைவு, மைலேஜும் அதிகம். அதனால இந்திய மார்க்கெட்ல CNG கார்களுக்கு எப்பவுமே ஒரு தனி மவுசு இருக்கு. ஆனா, CNG கார்கள்ல ஒரு பெரிய பிரச்சனை, டிக்கி-ல (boot space) இடமே இருக்காது. ஒரு பெரிய சிலிண்டர் மொத்த இடத்தையும் எடுத்துக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வாதான், கார் கம்பெனிகள் இப்போ டூயல் சிலிண்டர் CNG கார்களை கொண்டு வந்திருக்காங்க. ஒரே பெரிய சிலிண்டருக்கு பதிலா, ரெண்டு சின்ன சிலிண்டர்களை வெச்சுடுறாங்க. இதனால, லக்கேஜ் வைக்க தாராளமா இடம் கிடைக்குது. மைலேஜ்லயும் எந்த மாற்றமும் இல்லை. அதனாலதான் இந்த டூயல் சிலிண்டர் CNG கார்களுக்கு டிமாண்ட் அதிகமாகிட்டே இருக்கு. இப்போ இந்தியால இருக்கிற பெரிய கார் கம்பெனிகள் எல்லாமே டூயல் சிலிண்டர் CNG கார்கள் தயாரிப்புல கவனம் செலுத்துறாங்க. முக்கியமா நடுத்தர குடும்பங்களை குறிவெச்சு, பட்ஜெட் விலையில, அதிக மைலேஜ் மற்றும் பூட் ஸ்பேஸ் கொண்ட கார்களை கொண்டு வராங்க. அப்படிப்பட்ட டாப் 7 பட்ஜெட் ஃப்ரெண்ட்லி டூயல் சிலிண்டர் CNG கார்கள் இதோ!

இதையும் படிங்க :Dharma Karma Yoga : இனி ராஜ வாழ்க்கைதான்! காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
1) டாடா டியாகோ CNG (TATA Tiago CNG)
Image Credit : Tatamotors

1) டாடா டியாகோ CNG (TATA Tiago CNG)

டாடா டியாகோவின் டூயல் சிலிண்டர் CNG காரோட ஆரம்ப விலை ரூ. 5.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த கார்ல 1.2 லிட்டர் இன்ஜின், மேனுவல்-AMT கியர்பாக்ஸ், டூயல் ஏர்பேக்ஸ், ESC, டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் இருக்கு. நல்ல லுக், சூப்பர் இன்டீரியர், சிறந்த பாதுகாப்பு அம்சங்களோட இந்த கார் வருது. 

2) டாடா பஞ்ச் CNG (TATA Punch CNG) 

இப்போ மார்க்கெட்ல செம டிமாண்ட்ல இருக்குற கார் டாடா பஞ்ச். இதுலயும் இப்போ டூயல் சிலிண்டர் CNG மாடல் வந்துருக்கு. இந்த காரோட விலை ரூ. 6.79 லட்சத்துல இருந்து தொடங்குது. இது ஒரு கிலோ CNG-க்கு 26.99 கி.மீ. மைலேஜ் கொடுக்குது. 360 டிகிரி கேமரா உட்பட பல வசதிகள் இதுல இருக்கு. பட்ஜெட் விலையில ஒரு டூயல் CNG கார் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ். 

3) டாடா டிகோர் CNG (TATA Tigor CNG) 

டாடா நிறுவனத்தோட இன்னொரு டூயல் சிலிண்டர் CNG கார் இது. இதன் விலை ரூ. 7.21 லட்சத்துல இருந்து தொடங்குது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களோட வருது. LED ஹெட்லேம்ப்ஸ், ESP, ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். 

4) டாடா அல்ட்ராஸ் CNG (TATA Altroz CNG) 

இந்த காரோட விலை ரூ. 7.29 லட்சத்துல இருந்து தொடங்குது. இதுல 10.25 இன்ச் டச்ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் சீட்கள் போன்ற ப்ரீமியம் அம்சங்கள் இருக்கு.

இதையும் படிங்க : Fridge : Single Door-ஆ? Double Door-ஆ? இந்த விஷயம் தெரியாம ஃபிரிட்ஜ் வாங்காதீங்க!

Related Articles

Related image1
Petrol Price : 1 லிட்டர் பெட்ரோல் வெறும் 3 ரூபாய்தான்! எங்க தெரியுமா?
Related image2
SUV Car : ரூ.10 லட்சத்துக்குள் சூப்பரான SUV கார் வேண்டுமா? இந்த காரை மிஸ் பண்ணாதீங்க!
33
5) கிராண்ட் i10 நியோஸ் CNG (Grand i10 Nios CNG)
Image Credit : HYUNDAI

5) கிராண்ட் i10 நியோஸ் CNG (Grand i10 Nios CNG)

ஹூண்டாய் i10 நியோஸ் காரும் இப்போ டூயல் சிலிண்டர் CNG-யோட வருது. இதோட ஆரம்ப விலை ரூ. 7.26 லட்சம். இதுல ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங், டைப்-சி USB சார்ஜர், புதிய இன்டீரியர் டிசைன்னு பல அம்சங்கள் இருக்கு. 

6) ஹூண்டாய் ஆரா CNG (Hyundai Aura CNG) 

பட்ஜெட் ஃப்ரெண்ட்லி டூயல் சிலிண்டர் CNG கார்கள் பட்டியல்ல ஹூண்டாய் ஆராவும் இருக்கு. இதோட விலை ரூ. 7.81 லட்சத்துல இருந்து தொடங்குது. இதுல 1.2 லிட்டர் இன்ஜின், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கு. 

7) ஹூண்டாய் எக்ஸ்டர் CNG (Hyundai Exter CNG) 

ஹூண்டாய் நிறுவனத்தோட இன்னொரு பாப்புலர் டூயல் சிலிண்டர் CNG கார் இந்த எக்ஸ்டர். இதோட ஆரம்ப விலை ரூ. 6.99 லட்சம். இந்த கார் சுமார் 27.1 கி.மீ. மைலேஜ் கொடுக்குது. சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ப்ளூலிங்க் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற அம்சங்கள் இதுல இருக்கு.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாகனம்
ஆட்டோ
சிஎன்ஜி கார்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Toyota : இந்தியாவில் புது கெட்டப்பில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் - விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Hyundai Exter EMI: மாதம் ரூ.11,000-ல் ஹூண்டாய் எக்ஸ்டர் காரை வாங்க முடியுமா? இஎம்ஐ, விலை இதோ
Recommended image3
EV Fire: சார்ஜ் போடும்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீப்பிடிப்பது ஏன்? பேட்டரி வெடிப்பின் அறிவியல் காரணம்
Related Stories
Recommended image1
Petrol Price : 1 லிட்டர் பெட்ரோல் வெறும் 3 ரூபாய்தான்! எங்க தெரியுமா?
Recommended image2
SUV Car : ரூ.10 லட்சத்துக்குள் சூப்பரான SUV கார் வேண்டுமா? இந்த காரை மிஸ் பண்ணாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved