MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan Deleted Scene: ஜனநாயகன் டெலிடட் சீன் எப்போ ரிலீஸ்? எச்.வினோத் கொடுத்த அடிபொலி அப்டேட்

Jana Nayagan Deleted Scene: ஜனநாயகன் டெலிடட் சீன் எப்போ ரிலீஸ்? எச்.வினோத் கொடுத்த அடிபொலி அப்டேட்

Jana Nayagan : தளபதி விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அப்படத்தின் டெலிடட் சீன் குறித்து இயக்குநர் எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 29 2026, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jana Nayagan Deleted Scene
Image Credit : KVN Productions, SS Music

Jana Nayagan Deleted Scene

விஜய் நடித்த கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்', நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இந்த திரைப்படம் முதலில் ஜனவரியிலேயே வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் தொடர்பான தாமதம் காரணமாக பல மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ஏற்கனவே லீக் ஆகிவிட்டாலும், அதை தியேட்டரில் கண்டுகளிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால், ஜனநாயகன் படம் வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது.

Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டெலிடட் சீன்
Image Credit : X

டெலிடட் சீன்

ஜனநாயகன் படம் 3 மணிநேரம் 3 நிமிடம் ரன்னிங் டைம் உடன் வெளியாகி இருந்தது. இதிலும் சில காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்பே பேசியிருந்த இயக்குநர் ஹெச். வினோத், இரண்டு நகைச்சுவைக் காட்சிகள், இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு எமோஷனல் காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கிவிட்டோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நீக்கப்பட்ட காட்சிகளை தனியாக வெளியிடுவது குறித்து தயாரிப்பு நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அவை விரைவில் ரசிகர்களிடம் கொண்டு வரப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related Articles

Related image1
Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ
Related image2
Jana Nayagan Day 6 Box Office : மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்த ஜனநாயகன்
35
திரையில் வராத காட்சியால் வருத்தமடைந்த நடிகை
Image Credit : Google

திரையில் வராத காட்சியால் வருத்தமடைந்த நடிகை

இந்தப் படத்தில் நடித்திருந்த துணை நடிகை ஆனந்தி, தனது காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டிருப்பது குறித்து சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு மனவருத்தத்தை பகிர்ந்திருந்தார். இதற்கு முன்பும் அவர் நடித்த சில படங்களில் அவரது காட்சிகள் இறுதிக் கட்ட எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதே அனுபவம் 'ஜனநாயகன்' படத்திலும் ஏற்பட்டதால் ஏமாற்றமடைந்ததாக கூறிய அவர், தனது முயற்சிகள் ரசிகர்களிடம் சேராமல் போனது வருத்தம் அளித்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

45
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Image Credit : KVN Productions

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

விஜயின் கடைசி திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' மீது ரசிகர்களிடம் ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் வெளியீட்டு தாமதம், சென்சார் சிக்கல்கள் மற்றும் படம் இணையத்தில் முன்கூட்டியே கசிந்த சம்பவம் ஆகியவை படத்தின் மீதான ஆரம்ப உற்சாகத்தை ஓரளவு பாதித்ததாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

படம் வெளியான பிறகு, விஜயின் நடிப்பு மற்றும் திரை ஆளுமை பாராட்டுகளை பெற்றாலும், திரைக்கதை மற்றும் சில காட்சிகளின் அமைப்பு குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகின. குறிப்பாக, ஜெனரல் ஆடியன்ஸ் படத்தின் கதை அமைப்பு குறித்த பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

55
வசூல் நிலவரம்
Image Credit : Asianet News

வசூல் நிலவரம்

படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், ரசிகர்களின் ஆதரவால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. வெளியான முதல் வார முடிவில், உலகளவில் படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என்று திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதற்கிடையில், நீக்கப்பட்ட காட்சிகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகுமா என்ற கேள்வியே தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
யார் சொன்னா எம்ஜிஆர்னு.?! விஜய் ஒரு சுயம்பு தெரியுமா.?! போட்டுத்தாக்கும் சவுக்கு சங்கர்.!
Recommended image2
Jana Nayagan Day 6 Box Office : மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்த ஜனநாயகன்
Recommended image3
Jayamani Passes Away : சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... 'மலேசியா மாமா' நடிகர் ஜெயமணி காலமானார்!
Related Stories
Recommended image1
Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ
Recommended image2
Jana Nayagan Day 6 Box Office : மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்த ஜனநாயகன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved