ஆண்ட்டியை நம்பி போண்டியான நடிகர் கரண்..? சினிமா கேரியரை கோட்டை விட்ட கதையை புட்டு புட்டு வைத்த பயில்வான்!
நடிகரும், பத்திரிகையாளருமான, பயில்வான் ரங்கநாதன்..." தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த, நடிகர் கரண் தன்னுடைய சினிமா கேரியை கோட்டை விட்டதற்கு 42 வயது ஆண்ட்டி தான் காரணம் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரை உலகில் 1972 ஆம் ஆண்டு 'அச்சனும் பாப்பையும்' என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கரண். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவரின் உண்மையான பெயர் ரகு. இந்த பெயரில் தான் பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
குறிப்பாக, ராஜஹம்சம், பிரயாணம், சுவாமி ஐயப்பா ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான, கேரள ஸ்டேட் பிலிம் விருதை பெற்றார். இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதேபோல் தமிழில் 'எங்க பாட்டன் சொத்து' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து, 'இன' என்கிற மலையாள படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தமிழில் தீச்சட்டி கோவிந்தன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் தமிழில் நம்மவர், என்கிற படத்திலும் கமலஹாசனுக்கு மாணவனாக நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் இவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தொட்டில் குழந்தை, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, வைகறை பூக்கள், காதல் கோட்டை, போன்ற பல படங்களில் வில்லத்தனம் கலந்த செகண்ட் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
ராஜகாளியம்மன், பன்னாரி அம்மன் போன்ற படங்களில் வில்லத்தனத்தோடு தன்னுடைய ஹீரோயிசத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவர் நடிப்பில் வெளியான, தம்பி வெட்டேந்தி சுந்தரம், கொக்கி, கருப்ப சாமி குத்தகைக்காரர் போன்ற படங்கள், நல்ல வரவேற்பை பெற்றாராலும்... கடந்த 7 வருடங்களாக சினிமாவில் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
இவரின் இந்த நிலைக்கு காரணம், 42 வயது ஆண்ட்டி தான் என, புட்டு புட்டு வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது " டாப் ரேஞ்சில் கொடி கட்டி பறந்தவர் கரண். ஒரு கட்டத்தில் 42 வயது ஆண்டியை தனக்கு மேனேஜராக நியமித்து தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். அந்த ஆண்டியின் கை பாவையாக மாற்றப்பட்ட கரண் தன்னுடைய சினிமா குறித்த எல்லா முடிவையும் அவரையே எடுக்க வைத்தார். இதனால் இப்போது தனது மொத்த கேரியும் அவர் இழந்துவிட்டார். பல வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் ஆளே அட்ரெஸ் தெரியாமல் போய் விட்டார் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.