நடு இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம்.. தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த மோசமான செயல்! கைது செய்த போலீஸ்!
பழி உணர்ச்சியில், தாடி பாலாஜியின் மனைவி யாரும் இல்லாத நேரத்தில், நடு இரவில்... எதிர் வீட்டின் மீது கல் எறிந்த சம்பவத்திற்காக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினிகாந்த், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தாடி பாலாஜி. வெள்ளி திரையை தொடர்ந்து. சின்ன திரையிலும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தன்னுடைய மனைவி நித்யாவுடன், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு பிரபலமானவர்.
கடந்த சில வருடங்களாக தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர். மனைவி நித்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற ஆசையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பதை அறிந்து, தாடி பாலாஜியும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
AK 62: 'ஏகே 62' படத்தில் இருந்து அதிரடியாக விலகும் விக்னேஷ் சிவன்! ஏன்வெளியான பரபரப்பு காரணம்?
அப்போதைக்கு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது போல் இருவரும் காட்டிக் கொண்டாலும், பின்னர் தொடர்ந்து நித்யா தன்னுடைய மகள் போஷிகாவுடன் தனியாகவே வசித்து வருகிறார்.
nithiya
இந்நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியோடு, தாடி பாலாஜியின் மனைவி நித்யா செய்த செயலுக்காக அவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நித்யா தன்னுடைய மகள் மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு எதிரே... ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வசித்து வருகிறார். மேலும் அடிக்கடி நித்யாவுக்கும், எதிர் வீட்டில் வசித்து வரும் மணிக்கும் சண்டை ஏற்பட்டு உள்ளது. எனவே இவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, நடுராத்திரியில் யாரும் இல்லாத நேரத்தில்... ஓய்வு பெற்ற ஆசிரியரான மணி வீட்டின் மீது நித்யா கல் எறிந்து தாக்கியுள்ளார். இந்தக் கல் அவர் வீட்டில் மீது பட்டு பின்னர் அவருடைய வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கார் மீதும் பட்டு கண்ணாடி உடைந்துள்ளது.
பின்னர் இது குறித்து அவர் வீட்டில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியை சோதனை செய்து பார்த்தபோது தாடி பாலாஜியின் மனைவி நித்யா தான் கல் எரிந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஆசிரியரான மணி கொடுத்த புகாரி பேரில், நித்யாவை கைது செய்த மாதவரம் போலீசார், அவரை எச்சரித்து பிணையில் ரிலீஸ் செய்வதாக கூறப்படுகிறது.