- Home
- Cinema
- Theatre Releases : என்ன விலை முதல் சண்டக்காரி வரை... இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 13 படங்கள் என்னென்ன?
Theatre Releases : என்ன விலை முதல் சண்டக்காரி வரை... இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 13 படங்கள் என்னென்ன?
This Week Theatre Release Movies : திரையரங்கில் இந்த வாரம் விமல் மற்றும் ஸ்ரேயா நடித்த சண்டக்காரி உள்பட மொத்தம் 13 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதைப்பற்றி பார்க்கலாம்.

This Week Theatre Release Movies
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இந்த வாரம் பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. கருணாஸ் நடித்துள்ள ‘என்ன விலை’ முதல் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ வரை இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல் இதோ.
இந்த வார தியேட்டர் வெளியீடுகள்
என்ன விலை
சஜீவ் பழவூர் இயக்கத்தில் கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘என்ன விலை’. நிமிஷா சஜயன், கமலேஷ் ஜெகன், விஜயலட்சுமி வீரமணி, ஷாஷா சிவகுமார், மோகன் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வைப்
குணால் கெம்மு இயக்கி, நடித்து உருவாக்கியுள்ள இந்தி திரைப்படம் ‘வைப்’. ஸ்பார்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரீத்தி ஜிந்தா, வன்ஷிகா திர், யாஷ்பால் சர்மா, சர்மிளா தாகூர் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘வைப்’ செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
டாஸ்
அர்ஜுன் கபிகாட் இயக்கி, நடித்துள்ள கன்னட திரைப்படம் ‘டாஸ்’. சுதேஜ் ஷெட்டி, நவீன் டி. பாடில், அரவிந்த் போலார், போஜராஜ் வாமன்ஞ்சூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளை வந்தடைகிறது.
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
தி டார்க் ஹெவன்
பாலாஜி இயக்கியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ ஒரு தமிழ் திரைப்படமாகும். சித்து சித், தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் ஜானகிராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்
ஷ்யாமின் கிரீஷ் இயக்கியுள்ள மலையாள திரைப்படம் ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’. சங்கீத் பிரதாப், ஷரஃபுதீன், அகிலா பார்கவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பாரிஸ் கஃபே
சரஜ் சீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’ படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல் கே. மனோகரன், விஜய் விஸ்வா, நயனா சாய், சாய் விக்கி, பிபின் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் படமான இது செப்டம்பர் 18-ம் தேதி வெளியாக உள்ளது.
ஹப்பி ஜர்னி
அபிராம் நாயுடு இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘ஹப்பி ஜர்னி’. அன்னபூர்ணியம்மா, ஆமணி, ஜான்சி, பயல் ராதாகிருஷ்ணன், ஜினிஷா அலிஷெட்டி, ரூபா ஸ்ரீனிவாஸ், சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.
செப்டம்பர் 18ந் தேதி திரைக்கு வரும் படங்கள்
சண்டக்காரி
ஆர். மாதேஷ் இயக்கத்தில் விமல், ஷ்ரேயா சரண் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபு, சத்யன், கே.ஆர். விஜயா, ரேகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
L&O: லா அண்ட் ஆர்டர்
ரஞ்சித் பிரகாஷ் இயக்கியுள்ள மலையாள திரைப்படம் ‘L&O: லா அண்ட் ஆர்டர்’. பிரகாஷ் வர்மா, அபிராமி, ரிதுதேவ் அய்யப்பன், ஷெர்ஷா ஷெரிஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், நடிகர் மம்முட்டியும் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
அனிரீக்ஷித அதிதிகலு
மனோஜ் அன்னையா இயக்கத்தில் உருவாகியுள்ள கன்னட திரைப்படம் ‘அனிரீக்ஷித அதிதிகலு’. விவேக் சிம்ஹா, மைத்ரி ஜக்கி, சம்ப்ரதி ஆல்வா, தயா பல்லவகெரே, ஸ்ரீ தத்தா, தெய்விக் நாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த வார தியேட்டர் ரிலீஸ் மூவீஸ்
டாய்ரா
மேஹ்னா குல்சர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்திப் படம் ‘டாய்ரா’. கரீனா கபூர், ப்ரித்விராஜ் சுகுமாரன், பரமோத் சங்கீ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வெளியீட்டுக்கு முன்பே கவனம் பெற்றுள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
பீப்
எல். சண்முக சுந்தர் இயக்கியுள்ள தமிழ் திரைப்படம் ‘பீப்’. ராகவ், பிரேர்ணா கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஓட்டம் துள்ளல்
ஜி. மார்தாண்டன் இயக்கியுள்ள மலையாள திரைப்படம் ‘ஓட்டம் துள்ளல்’. விஷ்ணு உன்னிகிருஷ்ணன், விஜயராகவன், ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் சஜோன், டினி டாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படமும் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

