- Home
- Cinema
- ரஜினியுடன் மோதும் அஜித்; ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூர்யா? அடுத்த 4 மாதத்தில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?
ரஜினியுடன் மோதும் அஜித்; ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூர்யா? அடுத்த 4 மாதத்தில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Upcoming Tamil Movies : தமிழ் சினிமாவில் அடுத்த 4 மாதங்களில் ரஜினி, அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

செப்டம்பர் மாத வெளியீடுகள்
தமிழ் சினிமாவில் செப்டம்பர் மாதம் ஏராளமான படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. குறிப்பாக செப்டம்பர் முதல் வாரத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோகர் நடித்த இம்மார்டெல் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு போட்டியாக துல்கர் சல்மான் நடித்த ஐ ஆம் கேம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திலும் கயாடு லோகர் தான் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதற்கு அடுத்தபடியாக செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் சூரி நடித்த மண்டாடி, திரைப்படமும், கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 திரைப்படமும் போட்டிபோட்டு 10ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கு ஒரு நாள் கழித்து செப்டம்பர் 11ந் தேதி அருள்நிதியின் டிமாண்டி காலனி 3 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
பின்னர் செப்டம்பர் மாதம் 25ந் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய டோராத்தி படம் ரிலீஸ் ஆகிறது. அப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். அதற்கு போட்டியாக ஹிப்ஹாப் ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர நானி நடித்த பாரடைஸ் படம் செப்டம்பர் 24ந் தேதி திரைக்கு வர உள்ளது.
அக்டோபரில் செம ட்ரீட்
அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே விஜய் சேதுபதி மற்றும் ஜேசன் சஞ்சய்யின் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அக்டோபர் 1ந் தேதி பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து அக்டோபர் 2ந் தேதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படம் திரைக்கு வருகிறது.
இதையடுத்து இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ஜெயிலர் 2 அக்டோபர் 15ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் அக்டோபர் 16ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர நடிகர் அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் என்கிற டாக்குமெண்ட்ரி படமும் அக்டோபரில் ரிலீஸ் ஆக உள்ளதாம். அதனை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நவம்பர் தீபாவளி விருந்து
நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை வருகிறது. இதனால் அம்மாதம் ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும். தற்போது வரை சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் படம் தான் தீபாவளிக்கு திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
டிசம்பரில் என்னென்ன படங்கள் ரிலீஸ்?
டிசம்பர் மாதம் தமிழ் சினிமாவை பொருத்தவரை சூர்யா நடித்து வரும் சூர்யா 47 திரைப்படம் தான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சூர்யா, அடுத்த படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் அடிக்க காத்திருக்கிறார். ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் தான் அப்படத்தை இயக்கி உள்ளார்.
இதுதவிர ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட பான் இந்தியா படமான கிங் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். ஜவான் படத்திற்கு பின்னர் ஷாருக்கானும், அனிருத்தும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு கோலிவுட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

