- Home
- Cinema
- Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
Toxic vs Hi : தியேட்டரில் இந்த வாரம் நயன்தாரா நடித்த டாக்ஸிக் மற்றும் ஹாய் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர ஓடிடியில் என்னென்ன படங்கள் ஸ்ட்ரீம் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.

தியேட்டர் ரிலீஸ் படங்கள்
தியேட்டரில் இந்த வாரம் செம ட்ரீட் காத்திருக்கு. குறிப்பாக நயன்தாரா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வெயிட்டிங். அவர் நடித்த இரண்டு படங்கள் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. அதில் முதலாவதாக ராக்கிங் ஸ்டார் யஷ் உடன் அவர் நடித்த டாக்ஸிக் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அப்படம் ஆகஸ்ட் 26ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை கீது மோகன் தாஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, ஹூமா குரேஷி போன்ற பான் இந்தியா நாயகிகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டாக்ஸிக்கை தொடர்ந்து, நயன்தாரா நடித்த மற்றொரு படமான ஹாய் படம் திரையரங்குகளில் இந்த வாரம் ரிலீஸ் ஆகுது. இப்படம் வருகிற 28ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகுது. இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக கவின் நடித்துள்ளார். இதனை விஷ்ணு எடவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபு, பாக்யராஜ், ராதிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
Hi Movie First Review : கவின் - நயன் ஜோடி பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? ஹாய் படத்தின் முதல் விமர்சனம் இதோ
ஓடிடி ரிலீஸ் என்னென்ன?
திரைப்பட ரசிகர்களுக்கும் ஓடிடி பார்வையாளர்களுக்கும் இந்த வாரம் பல்வேறு மொழிகளில் புதிய திரைப்படங்களும் இணையத் தொடர்களும் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 26ஆம் தேதி, தி லாஸ்ட் சன்ரைஸ் திரைப்படம் ஆங்கில மொழியில் பிரைம் வீடியோ வாடகை சேவையிலும், தி லாஸ்ட் சல்யூட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியாகிறது. இதே நாளில் சீன மொழியில் உருவாகியுள்ள தி எர்லி ஸ்பிரிங் இணையத் தொடரும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. மேலும், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள டெத் ஆஃப் தி பாஸ்டர்ஸ் வைஃப் இணையத் தொடரையும் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 27ஆம் தேதி, தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள நியூட்டன்ஸ் தேர்டு லா திரைப்படம் ஈடிவின் தளத்தில் வெளியாகிறது. இதனுடன் பியூட்டி இன் பிளாக் தொடரின் 3வது சீசன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. ஆங்கில மொழியில் உருவாகியுள்ள அடல்ட்ஸ் தொடரின் 2வது சீசன் ஹுலு தளத்தில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் அன்பே டயானா
ஆகஸ்ட் 28ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் அன்பே டயானா திரைப்படத்தை சோனிலிவ் தளத்தில் பார்க்கலாம். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள வாராந்திர தொடரான பார்ட் டைமர்ஸ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் மைக்கேல் திரைப்படம் ஆகியவை ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
டார்க் மேட்டர் தொடரின் 2வது சீசன் ஆப்பிள் டிவியில் வெளியாகிறது. இதே நாளில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள தி விஸ்பர் மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
மேலும், கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6: ஆன் எக்ஸ்டெண்டட் லுக் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. கொரிய, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள மவுஸ்ட்ராப் இணையத் தொடரும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. ஹங்கிரி திரைப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் லயன்ஸ்கேட் பிளே தளத்தில் வெளியாகிறது. சீக்ரெட் வுமன் திரைப்படம் டேனிஷ் மற்றும் ஆங்கில மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸிலும், டெசர்ட் வாரியர் திரைப்படம் ஆங்கில மொழியில் ஹுலுவிலும் வெளியாகின்றன. ஓல்மோ திரைப்படத்தை பிரைம் வீடியோ வாடகை சேவையிலும், பென்னி லேன் இஸ் டெட் திரைப்படத்தை ஷடர் தளத்திலும் ஆகஸ்ட் 28 முதல் பார்க்கலாம்.
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
ஆகஸ்ட் 29ஆம் தேதி, கொரிய மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ள ஃபோர் ஹேண்ட்ஸ், டூ சொனாட்டாஸ் இணையத் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
இதற்கு முன்னதாக, அபவ் அண்ட் பிலோ, பேட்மேன்: நைட்ஃபால் பார்ட் 1, தி டெப், ஹேட்ஸ்டவுன்: தி மியூசிக்கல், ஹெர் பிரைவேட் ஹெல் மற்றும் மோட்டார் சிட்டி உள்ளிட்ட ஆங்கில திரைப்படங்களும் பிரைம் வீடியோ வாடகை சேவையில் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 26 முதல் 29ஆம் தேதி வரை திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் என ஓடிடி தளங்களில் ரசிகர்களுக்கு ஏராளமான புதிய வரவுகள் காத்திருக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

