- Home
- Cinema
- Theatre Releases : விநாயகர் சதுர்த்தி லீவுக்கு தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? ஃபுல் லிஸ்ட் இதோ
Theatre Releases : விநாயகர் சதுர்த்தி லீவுக்கு தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? ஃபுல் லிஸ்ட் இதோ
Theatre Release Movies List : விநாயகர் சதுர்த்தி-யை ஒட்டி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், இந்த வாரம் ஏராளமான புதுப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன. அதைப்பற்றி பார்க்கலாம்.

This Week Theatre Release Movies
தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை சினிமாவுடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இந்த வாரம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல்வேறு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்டிக் காமெடி, மர்மம் என வெவ்வேறு ஜானர்களில் உருவாகியுள்ள இந்தப் படங்களில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் முக்கியமான திரைப்படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
Sardar 2 : ஆக்ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்
சர்தார் 2
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘சர்தார்’ படத்தின் அடுத்த பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மாரெம்மா
தெலுங்கு திரையுலகில் வெளியாகவுள்ள ஆக்ஷன் திரைப்படம் ‘மாரெம்மா’. மஞ்சளா நாகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாதவ் பூபதிராஜு கதாநாயகனாக நடித்துள்ளார். தீபா பாலு, விகாஸ் வசிஸ்தா உள்ளிட்டோரும் நடித்துள்ள இந்தப் படம் தெலங்கானாவின் கிராமப்புறப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
ரீயூனியன்
நீண்ட காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அருள்தாஸ், இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாட்ஸ் ரெக்ஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘ரீயூனியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அருள்தாஸுடன் அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன் பேகம், ஜெயக்குமார் ஜானகிராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தத் தமிழ்ப் படம் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சாலகாரர சஹகார சங்கம்
கன்னடத்தில் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாலகாரர சஹகார சங்கம்’. ஆர்.விக்ரம் தனஞ்ஜெயா இயக்கியுள்ள இப்படத்தில் லோகேஷ், ப்ரவீன் குமார் கஸ்தி, கெம்பகவுடா, ஜாலி ஜாக், ரக்ஷிதா ஷிவமோகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்தக் கன்னட திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.
எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்
ஆதித்ய ஹாசன் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்’. இளைஞர்களை மையமாகக் கொண்ட ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் தேவரகொண்டாவுடன் வைஷ்ணவி சைதன்யா, சிவாஜி, வாசுகி, ரோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்குப் படம் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரதம த்ரிஷ்திய குட்டக்கர்
மலையாளத்தில் வெளியாகும் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘பிரதம த்ரிஷ்திய குட்டக்கர்’ இடம்பெற்றுள்ளது. ஷஹாத் நிலம்பூர் இயக்கியுள்ள இந்த மர்மத் திரைப்படத்தில் பார்வதி திருவோத்து, சித்தார்த் பரதன், மேத்திவ் தாமஸ், உன்னிமாயா பிரசாத், ஆஸீஸ் நெடுமங்காடு, விஜயராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மர்மமும் சஸ்பென்ஸும் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மண்டாடி
இந்த வார வெளியீடுகளில் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகம் பெற்றுள்ள மற்றொரு திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் கடல் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சூரியுடன் சுஹாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார், கிரிஷ் ஹாசன், ரவீந்திர விஜய், மிதுன் ஜெய் சங்கர், பால சரவணன், ஸ்டன் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களம் மற்றும் நட்சத்திரப் பட்டாளம் காரணமாக ஏற்கெனவே கவனம் பெற்றுள்ள ‘மண்டாடி’ செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

