Asianet News TamilAsianet News Tamil

தேனி தொகுதியில் கல்வெட்டு எம்.பி. ஓபிஎஸ் மகன் காலியாகிறார்...!

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பின்னடைவை சந்தித்துள்ளார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார். 

ops son raveendranath kumar trail
Author
Tamil Nadu, First Published May 23, 2019, 9:48 AM IST

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பின்னடைவை சந்தித்துள்ளார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார். ops son raveendranath kumar trail

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த 39 மக்களவை தொகுதி விஐபி தொகுதிகளில் ஒன்றாக தேனி தொகுதி கருதப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும், காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவனும், இவர்களை எதிர்த்து அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் களம் இறங்கினார். 

இந்நிலையில் தேனியில் அதிமுக வேட்பாளர் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 600 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறார். இப்போது தான் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் ஆகி உள்ளதால் முடிவுகள் மாறிக்கொண்டே இருந்து வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios