திருச்சி மாவட்டம் கீழதேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி(22). இவரது வீட்டின் அருகே ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 6 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியிடம் செல்வமணி அடிக்கடி பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வமணி சிறுமியுடன் பேச்சு கொடுத்துள்ளார்.

பின் சிறுமியை தனது வீட்டின் பின்பகுதிக்கு அழைத்து சென்ற செல்வமணி யாரும் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். அதைப்பற்றி எதுவும் அறியாத சிறுமி கதறி அழுதுள்ளார். சிறுமியை மிரட்டிய செல்வமணி யாரிடமும் கூற கூடாது என சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். மகள் அழுது கொண்டே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்துள்ளனர்.

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!

அப்போது செல்வமணி செய்தவற்றை சிறுமி கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வமணியை அதிரடியாக கைது செய்தனர்.  அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.