Asianet News TamilAsianet News Tamil

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம்: பெற்றோரிடம் அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி!

சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்

Minister ma subramanian assures action against youth dead who undergone weight loss surgery smp
Author
First Published Apr 25, 2024, 11:03 AM IST

புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் துரை செல்வம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகமுகரான இவருக்கு ஹேமசந்திரன் என்ற மகன் உள்ளார். ஹேமசந்திரன்  உடல் பருமன் அதிகமாக இருந்ததால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. உடல்பருமன் சிகிச்சையின்போது, இளைஞர் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின்போது புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி அளித்துள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் பம்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாலக்காடு மக்களவை தொகுதி: சிபிஎம், காங்கிரஸை அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கும் பாஜக?

கடந்த ஆறு மாதமாக தனியார் மருத்துவமனையில் மருத்துவர் பொற்கோ என்பவர் தொடர்ந்து தொலைபேசி மூலம் கவுன்சிலிங் செய்து சிகிச்சைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ஆலோசனை நடத்திய தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் தனக்கென்று தனியாக எந்த வசதியுமில்லாத மருத்துவமனையில் வைத்து  சிகிச்சை அளித்துள்ளதாக கூறப்படுக்கிறது. அங்கு அறுவை சிகிச்சை துவங்கிய 15 நிமிடங்களில் பதற்றத்துடன் வந்த மருத்துவர் பொற்கோ, இங்கு சிகிச்சை அளிக்க முடியாத என கூறி, உயர்ரக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்திலையே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் தவறான சிகிச்சை அளித்திருப்பததால் இறந்திருக்க கூடும் என குற்றம் சாட்டி சென்னை பம்மல்  காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios