திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!
காத்திருப்பு அறையில், பக்தர்கள் பல மணிநேரம் தங்க வைக்கப்படாமல் 31-ந் தேதி வரை நேரடி தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். இலவச தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆந்திர மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். உலகின் பணக்கார கடவுளாக அறியப்படும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என்று உண்டியலில் செலுத்துகின்றனர். சாதாரண நாட்களிலேயே அதிகமான கூட்டம் காணப்படும் திருப்பதியில் விடுமுறை தினங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 3 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. பள்ளிகள்,கல்லூரிகள்,திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதியிலும் கொரோனா பாதிப்பால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அடித்து ஆடுகிறார் எடப்பாடியார்! முதல்வரை தாறுமாறாக புகழ்ந்த கவிஞர்..!
காத்திருப்பு அறையில், பக்தர்கள் பல மணிநேரம் தங்க வைக்கப்படாமல் 31-ந் தேதி வரை நேரடி தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். இலவச தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு, ரூ.300 விரைவு தரிசனம், திவ்யதரிசனம் உள்ளிட்ட நேரடி ஒதுக்கீடு தரிசனத்தில் மட்டுமே, பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.
முக்கிய பூஜைகள் அனைத்தும் மார்ச் 31-ந் தேதி வரை ரத்து செய்யபட்டுள்ள நிலையில் அப்பூஜைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் அதற்கு பதிலாக வி.ஐ.பி., பிரேக் தரிசன அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதனிடையே திருப்பதியில் தற்போது பக்தர்கள் கூட்டம் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் அன்னதான கூடங்கள், தங்கும் விடுதிகள், கவுண்டர்கள் என அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
7 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!