அடித்து ஆடுகிறார் எடப்பாடியார்! முதல்வரை தாறுமாறாக புகழ்ந்த கவிஞர்..!

தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு ! தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று ! தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும் !

Poet thamarai greets cm palanisamy

தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இருந்து வந்தது. அச்சட்டத்தின் படி இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க அவசியம் இல்லாமல் இருந்தது. அந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு தற்போது திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி பட்டபடிப்பு மட்டுமின்றி 10 மற்றும் 12ம் வகுப்பிலும் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என சட்ட திருத்தம் மேற்கொள்ளபட்டுள்ளது. அதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். தமிழக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான தாமரை, உங்களால் முடியும் முதல்வரே! அடித்து ஆடுங்கள் என பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது முக நூல் பக்கத்தில் அவர் கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

Poet thamarai greets cm palanisamy

கைதட்டி வரவேற்கிறோம் ! அடித்து ஆடுகிறார் எடப்பாடியார்!

தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு ! தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று ! தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும் ! தமிழ் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முதன்மையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எந்த மொழிச்சிக்கலும் இல்லா வண்ணம் நடத்தப்படுவதே சிறந்த மக்களாட்சி !.

தனியார் பள்ளிகள் செய்யும் துரோகத்தை மன்னிக்கவே முடியாது..! கொந்தளிக்கும் ராமதாஸ்..!

Poet thamarai greets cm palanisamy

இது சிலருக்குக் கசப்பாக இருக்கக் கூடும். 'தமிழ்நாட்டில் தமிழ்' என்றுதானே கேட்கிறோம் ?? ஆந்திராவில் தமிழ், கர்நாடகத்தில் தமிழ், கேரளத்தில், ம.பி,உ.பி,பஞ்சாப்,ஹரியானாவில் ஆட்சிமொழி தமிழென்றா கேட்கிறோம் ?? அப்புறம் ஏன் கசக்க வேண்டும் ?? வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே ! நம் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, யாரையும் வாழ வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என அறிக !. நம் மொழிப்பற்றை, மொழி வெறியாகத் திரித்தால் அது திரிப்பவர்களின் பிரச்சினை, நம் பிரச்சினையில்லை !

Poet thamarai greets cm palanisamy

பி.கு : அப்படியே இந்த வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமானநிலையம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழை, தமிழரை உறுதிப்படுத்துக !,தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும்/அடையும் அனைத்து வானூர்திகளிலும் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும்.  உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள்!

இவ்வாறு தாமரை தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

7 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios