உன்னை பணக்காரராக மாற்ற வேண்டும் என்றால் உன்னுடைய மனைவி என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் சாமியார் கூறினார். ஆனால் இதற்கு மறுத்த மனைவியை கணவர் நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் மான்பால் சிங். சமீபத்தில் அங்குள்ள சாமியார் சந்தாஸ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக கஞ்சா அடித்து வந்த நிலையில், உனது மனைவியை என்னுடன் உடலுறவு கொள்ள சம்மதித்தால் உன்னை பணக்காரராக மாற்றிக்காட்டுகிறேன் என்று சாமியார் மான்பாலிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மான்பால் தனது மனைவி ரஜ்னியை சாமியாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனை ரஜ்னி தனது சகோதரிடம் கூற, அவர் மான்பாலை கடுமையாக எச்சரித்துள்ளார். இந்நிலையில், கங்கை நதியில் பூஜை என்று அழைத்துச் சென்று ரஜ்னியை, மான்பால் நீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக ரஜ்னியின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் பெயரில் கங்கை நதியில் தேடிய போது ரஜ்னியின் சடலத்தை போலீசார் மீட்டனர். மேலும், கொலைக்குற்றம் தொடர்பாக மான்பால் மற்றும் சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஏற்கனவே சாமியார் ஏற்கனவே ஹெராயின் வைத்திருந்த குற்றத்துக்காக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.