Asianet News TamilAsianet News Tamil

13 வருட காதல், விடுமுறையில் வரும்போதெல்லாம் வளைத்துகட்டி உல்லாசம்.. கழற்றிவிட முயன்ற ராணுவ வீரன் கைது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  உல்லாசம் அனுபவித்துவிட்டு மோசடி செய்ததாக ராணுவ வீரன் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 He fell in love with a young woman and cheated her without marrying her. Soldier arrested.
Author
First Published Aug 30, 2022, 7:19 PM IST

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  உல்லாசம் அனுபவித்துவிட்டு மோசடி செய்ததாக ராணுவ வீரன் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்த கொடுமை நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, பெரும்பாலும் பெண்கள் ஆசை வார்த்தை கூறி வக்கிர எண்ணம் கொண்ட ஆண்களால் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது, அந்த வரிசையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி  பலமுறை உல்லாசம் அனுபவித்து கைவிட்ட ராணுவ வீரன் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

 He fell in love with a young woman and cheated her without marrying her. Soldier arrested.

இதையும் படிங்கள் : இரண்டு முறை கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான மனைவி.. 3வது முறையாக என்ன நடந்தது தெரியுமா?

முழு விவரம் பின்வருமாறு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த  ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (35) பொன்பத்தி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார், 2010ஆம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகாலம் தாலி கட்டாத மனைவியாகவே காதலியை சிலம்பரசன் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலம்பரசனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது, அவர் பணியில் சேர்ந்த பின்னும் தொலைபேசியில் காதலியுடன் அன்றாடம் உரையாடி வந்தார்.

இதையும் படிங்கள் :  மாட்டுக் கறி சாப்பிட்டால் உறவு ... காதலனை டார்ச்சர் செய்த காதலி... கதவை பூட்டிக் கொண்டு எடுத்த பயங்கர முடிவு

விடுமுறையில் வரும் போதெல்லாம் காதலியை சந்தித்து ஊர் சுற்றி வந்துள்ளார், செட்டிபாளையத்தில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்தப் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். விடுமுறைக்கு வரும் போதெல்லாம் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார்,  தற்போது விடுமுறையில் சிலம்பரசன் வந்துள்ளார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் கேட்டுள்ளார், ஆகஸ்ட் 24ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் அந்தப் பெண் கூறியதாக தெரிகிறது,

 He fell in love with a young woman and cheated her without marrying her. Soldier arrested.

ஆனால் அதை ஏற்க மறுத்த ராணுவவீரர் சிலம்பரசன் அந்த பெண்ணை ஆபாசமாக பேசி அவமானப்படுத்தியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ராணுவ வீரர் சிலம்பரசன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், கடந்த 13 ஆண்டுகளாக காதலித்தது மட்டுமல்லாமல், அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios