Asianet News TamilAsianet News Tamil

மாட்டுக் கறி சாப்பிட்டால் உறவு ... காதலனை டார்ச்சர் செய்த காதலி... கதவை பூட்டிக் கொண்டு எடுத்த பயங்கர முடிவு

மாட்டுக்கறி சாப்பிட வேண்டுமென காதலனை காதலி கட்டாயப்படுத்தி வந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.


 

Boyfriend commits suicide after forcing girlfriend to eat beef in Surat, Gujarat.
Author
First Published Aug 29, 2022, 8:44 PM IST

மாட்டுக்கறி சாப்பிட வேண்டுமென காதலனை காதலி கட்டாயப்படுத்தி வந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக இளைஞர்கள் காதல் திருமணங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காதலிக்க ஆரம்பித்த சில நாட்கள்வரை அவர்களின் காதல் பயணம் இனிமையாகவே செல்கிறது, காதல் என்பது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வாய்ப்பு வழங்குகிறது, காதலிக்கும் நேரத்தில் ஒருவரையொருவர் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலானோர் காதலை அதிகம் விரும்புகின்றனர். அன்புக்காக ஏங்கும் சிலர் காதலில் விழுகின்றனர், இன்னும் சிலர் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு பின்னர் விலகி விடுகின்றனர்.

Boyfriend commits suicide after forcing girlfriend to eat beef in Surat, Gujarat.

இதையும் படியுங்கள்: எனக்கு கிடைக்காத நீ யாருக்கு கிடைக்கக்கூடாது! செத்துப் போ! பள்ளி மாணவி நடுரோட்டி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.!

இன்னும் சிலர் தவறான அணுகுமுறையால் கொலைகள், தற்கொலைகளும் ஆளாகின்றனர். இந்த வரிசையில் காதலில் சிக்கிய இளைஞன் தற்கொலைக்கு ஆளாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- குஜராத் மாநிலம் உதானா பட்டேல் நகரில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் சிங் என்பவர் தங்கி வசித்து வந்தார், அவருக்கு  சோனம் அலி என்ற பெண்ணின் பழக்கம் ஏற்பட்டது,  அது நாளடைவில் காதலாக மாறியது,  தனது காதல் விவகாரத்தை ராகுல் சிங் தனது வீட்டில் கூறினார், ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை, அதானால் அன்று முதல் அவர் தனது குடும்பத்தினருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: இளம்பெண்ணுக்கு அந்த இடத்தில் கை வைத்து டார்ச்சர்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! டாக்டர் மிரட்டல்

திருமணம் செய்து கொள்ளாமலேயே காதலியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். கணவன் மனைவியாக அவர்கள்  சூரத்தில் தங்கி வசித்து வந்தனர், ஒரு நாள் காதலி  சினம் அலி, தனது சகோதரனுடன் சேர்ந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிடும் படி ராகுல் சிங்கை நிர்ப்பந்தித்தார், ஆனால் ராகுல் சிங்கிற்கு மாட்டிறைச்சி சாப்பிட்டு பழக்கம் இல்லை என்பதால் அவர் அதை மறுத்தார், ஆனாலும் சோனம் அலியை ராகுல் சிங் விடவில்லை, கட்டாயம் சாப்பிட்டே தீர வேண்டும் இல்லையென்றால் உறவை முடித்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார், அதுமட்டுமின்றி சோனத்தின் சகோதரர் மாட்டிறைச்சி சாப்பிடாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

Boyfriend commits suicide after forcing girlfriend to eat beef in Surat, Gujarat.

இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார், காதலுக்காக வாழ்க்கையில் பெரிய தவறு செய்து விட்டதாக ராகுல் சிங் மனம் வருந்தினார், காதலுக்காக குடும்பத்தையே விட்டு வந்த  தன்னை காதலி கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதை அவரால் ஏற்க முடியவில்லை, இதனால் தற்கொலை கடிதத்தை எழுதி பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார், அதன்பின்னர் தனது அறைக்குச் சென்று அவர் தற்கொலை செய்து கொண்டார், அறையின் அவர் சடலமாக கிடப்பதை பார்த்த காதலி அவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார், போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த சம்பவம் ஜூலை 27ஆம் தேதி நடந்தது, இந்நிலையில்தான் ராகுல் சிங்கின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில் காதலி துன்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ராகுலின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காதலி மற்றும் அவரது சகோதரர் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios