பொள்ளாச்சி அருகே வாயில் துணியை வைத்து திணித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே வாயில் துணியை வைத்து திணித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நேற்று முன்தினம் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அவர் வசிக்கும் பகுதியின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தென்னை ஓலையை கிழித்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி (32) என்பவர் அங்கு வந்துள்ளார்.
அப்போது, அவர் திடீரென மூதாட்டியின் வாயில் துணியை திணித்து கீழே தள்ளி கதற கதற பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மூதாட்டி தொடர்ந்து முனகல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து பார்த்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் வெள்ளிங்கிரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
உடனே இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வெள்ளிங்கிரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 80 வயது மூதாட்டியை இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 5, 2020, 2:06 PM IST