பாட்டு போட்டு கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த யுவன் சங்கர் ராஜாவை கடத்திய பிரபல நடிகர்
Yuvan Shankar Raja : யுவன் கைவசம் கார்த்தியின் விருமன், விஷாலின் லத்தி, சுந்தர் சி-யின் காஃபி வித் காதல், கோமாளி பட இயக்குனரின் லவ் டுடே, குக் வித் கோமாளி புகழ் நடிக்கும் மிஸ்டர் ஷூ கீப்பர், சரத்குமாரின் பரம்பொருள் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.
இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா, கடந்த 1997-ம் ஆண்டு ரிலீசான சரத்குமாரின் அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆன போதிலும் இன்றளவும் டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன்.
சமீபத்தில் இவரது இசையில் வெளியான விருமன் பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையகிளப்பி வருகின்றன. அந்த அளவுக்கு தனது பாடல்களை கேட்பவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் அளவுக்கு இசையை கொடுப்பவர் தான் யுவன். இடையே சில ஆண்டுகள் அதிகளவிலான படங்களுக்கு இசையமைக்காமல் இருந்து வந்த யுவன் தற்போது மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி உள்ளார்.
தற்போது இவர் கைவசம் கார்த்தியின் விருமன், விஷாலின் லத்தி, சுந்தர் சி-யின் காஃபி வித் காதல், கோமாளி பட இயக்குனரின் லவ் டுடே, குக் வித் கோமாளி புகழ் நடிக்கும் மிஸ்டர் ஷூ கீப்பர், சரத்குமாரின் பரம்பொருள் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இந்நிலையில், பாட்டு போட்டு கொடுக்காததால் யுவனை கடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதையும் படியுங்கள்... செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா… தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள்!!
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார், அமிதாஷ் நடிக்கும் படம் பரம்பொருள். இப்படத்திற்காக பாட்டு போட்டு கொடுக்காததால் தான் அவரை நடிகர் சரத்குமார் கடத்தும் படியான புரமோஷனல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜிம்முக்கு செல்லும் யுவனை அங்கு வரும் சரத்குமார் முகத்தை மூடி கடத்தி சென்று 2 நாட்களில் பாடல் வேண்டும் என்று மிரட்டி கேட்கும்படியான காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
அதன்பின் சிப்பரா ரிப்பரா என்கிற பாடலுக்கு யுவன் டியூன் போடும் படியான காட்சிகளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. இப்பாடல் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சரத்குமாரின் அரவிந்தன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான யுவன், பின்னர் 2000-ம் ஆண்டு வெளியான ரிஷி படத்தின் பணியாற்றினார். அதன்பின்னர் தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் சரத்குமார் உடன் யுவன் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 20 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!