செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா… தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள்!!

சென்னையில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். 

actor sivakarthikeyans daughter sang tamil thai vaazhthu in closing ceremony of the chess olympiad

சென்னையில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில், உலகம் முழுவதிலும் இருந்து வந்த 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ‘திடீர்’ மாற்றம் - தேர்வு எப்போது தெரியுமா?

மேலும் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. அதோடு மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெண்கலம் வென்றுள்ளது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி,சேகர்பாபுக்கு எல்லாம் அமைச்சர் பதவி.! நினைச்சியிருந்தா எப்பவோ அமைச்சராகி இருப்பேன்-வேல்முருகன்

இந்த விழாவில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பூப்பந்தாட்டம், கண்ணாமூச்சி, சதுரங்கம் என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். அதன் பின்னர் விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யானதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios