MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது? மாணவர்களுக்கு 44 நாட்கள் கோடை விடுமுறை!

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது? மாணவர்களுக்கு 44 நாட்கள் கோடை விடுமுறை!

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 20 2026, 07:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியதை அடுத்து மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பின்னர் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் பணி ஏப்ரல் 9 முதல் தொடங்கி ஏப்ரல் 20 வரை நடத்தப்படவுள்ளது. அதேபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை தமிழ், ஆங்கிலம் தேர்வு முடிவடைந்துள்ளன.

25
Image Credit : School education pro

இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது.

Related Articles

Related image1
மூன்று மாவட்டங்களில் முரட்டு தனமாக ஊத்தப்போகும் மழை.. அப்படினா.. சென்னையின் நிலவரம் என்ன?
Related image2
காலையிலேயே வந்த ஹேப்பி நியூஸ்! ஏப்ரல் 23ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
35
Image Credit : our own

ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பள்ளி கட்டிடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படவுள்ளன. இதனால், கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாத வகையில், தேர்வு தேதியில் மாற்றம் செய்து முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது.

45
Image Credit : Google

அதன்படி முழு ஆண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, துறை செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

55
Image Credit : our own

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை கோடை விடுமுறை 44 கிடைக்க உள்ளதால் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தேர்வு
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பு சீமானை பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்: அதிமுகவுக்கு ஆதரவா?
Recommended image2
மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.. வீடு தேடி வரும் குழு.. சூப்பர் அறிவிப்பு!
Recommended image3
Now Playing
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்
Related Stories
Recommended image1
மூன்று மாவட்டங்களில் முரட்டு தனமாக ஊத்தப்போகும் மழை.. அப்படினா.. சென்னையின் நிலவரம் என்ன?
Recommended image2
காலையிலேயே வந்த ஹேப்பி நியூஸ்! ஏப்ரல் 23ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved