MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காலையிலேயே வந்த ஹேப்பி நியூஸ்! ஏப்ரல் 23ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?

காலையிலேயே வந்த ஹேப்பி நியூஸ்! ஏப்ரல் 23ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?

தமிழகம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மாநில முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 19 2026, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக சட்டமன்ற தேர்தல்
Image Credit : ChatGPT

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது, இம்முறை எத்தனை கட்டங்களாக நடைபெற போகிறது என்ற எதிர்பார்ப்புகள் மத்தியில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதாவது தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வியாழக்கிழமை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி திங்கள் கிழமை எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

25
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
Image Credit : Asianet News

தேர்தல் நடத்தை விதிகள் அமல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அந்நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் தேர்தல் நடைபெறும் நாளில் ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

Related Articles

Related image1
வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கோடை மழை! இன்றும் தரமான சம்பவம் இருக்கா? இதோ குளு குளு அப்டேட்
Related image2
2021 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்
35
 ஏப்ரல் 23 சம்பளத்துடன் விடுமுறை
Image Credit : Asianet News

ஏப்ரல் 23 சம்பளத்துடன் விடுமுறை

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கப்பட வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

45
பொது விடுமுறை அறிவிப்பு
Image Credit : Google

பொது விடுமுறை அறிவிப்பு

ஏற்கனவே தமிழகம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மாநில முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

55
மற்ற மாநிலங்களில் விடுமுறை விவரம்
Image Credit : X

மற்ற மாநிலங்களில் விடுமுறை விவரம்

கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதால் ஏப்ரல் 23, 29 தேதிகளிலும் விடுமுறை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தேர்தல்
தமிழ்நாடு
சம்பளம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கோடை மழை! இன்றும் தரமான சம்பவம் இருக்கா? இதோ குளு குளு அப்டேட்
Recommended image2
2021 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்
Recommended image3
Now Playing
தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
Related Stories
Recommended image1
வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கோடை மழை! இன்றும் தரமான சம்பவம் இருக்கா? இதோ குளு குளு அப்டேட்
Recommended image2
2021 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved