- Home
- Tamil Nadu News
- தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பு சீமானை பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்: அதிமுகவுக்கு ஆதரவா?
தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பு சீமானை பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்: அதிமுகவுக்கு ஆதரவா?
Interesting Facts about NTK Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி யாருக்கும் தெரியாத அரசியல் ரகசியங்கள் …

Interesting Facts about NTK Seeman
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலானது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைய போகிறது. இதுவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட நிலையில் இந்த ஆண்டு தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறங்கியுள்ளது.
இதன் காரணமாக திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற 2 கட்சிகளான தவெக மற்றும் நாதக ஆகிய கட்சிகள் மட்டும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. வழக்கத்திற்கு மாறாக இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தல் களமானது பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Unknown facts about Seeman
இந்த நிலையில் தான் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னதாக ஒவ்வொரு கட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாக்களர்களின் கடமை. அந்த வகையில் இந்த தொகுப்பில் நாம் காண இருப்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானைப் பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரஸ்யமான கட்சியைப் பற்றி தான். இன்று பல கட்சிகளை விமர்சிக்கும் சீமான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ள செந்தமிழன் சீமான் அவர்களின் வாழ்க்கை, ஒரு திரைப்படத்தை விட சுவாரஸ்யமானது. சிவகங்கை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் தொடங்கி, கோலிவுட் முதல் கோட்டை வரை அவர் கடந்து வந்த பாதையில் பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான பின்னணித் தகவல்கள் இதோ..
Naam Tamilar Katchi
கடந்த 1966 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகிலுள்ள அணையூரில் பிறந்தவர் தான் செந்தமிழன் சீமான். இவரது இயற்பெயர் செபாஸ்டியன் சீமான். அப்பாவின் பெயரான செந்தமிழன் என்பதை தனது பெயருக்கு அடைமொழியாக சூட்டிக் கொண்டார். சீமானின் தந்தை செந்தமிழன் தீவிர காங்கிரஸ் தொண்டர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் திராவிட இயக்க கொள்கைகளால் கவரப்பட்ட சீமான் தமிழ் தேசியம் என்ற பாதையை தேர்வு செய்தார்.
அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம்
கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழப்போர் இறுதிகட்டத்தின் போது சினிமா பிரபங்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக பேச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு சீமான் தனது நாம் தமிழர் இயக்கத்தை நாம் தமிழர் என்ற கட்சியாக மாற்றினார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தமாக 63 இடங்களில் போட்டியிட்டது. இதில், 59 இடங்களில் காங்கிரஸிற்கு எதிராக சீமான் பிரச்சாரம் செய்தார். மேலும், 62 இடங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. தொடர்ந்து பல தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த சீமானின் நாம் தமிழர் கட்சியானது 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு 12,497 வாக்குகள் பெற்று 5ஆவது இடம் பிடித்தார்.
Tamilnadu Assembly Elections 2026
இதில் கட்சி போட்டியிட்ட 234 தொகுதியிலும் தோல்வி அடைந்தாலும் 1.1 சதவிகித வாக்குகளை பெற்றது. இந்த தேர்தல் கொடுத்த உத்வேகத்தின் காரணமாக 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். 2016 ஆம் ஆண்டைப் போன்று 2021 ஆம் ஆண்டும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு 48.597 வாக்குகள் பேற்று 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது.
2011 மற்றும் 20216 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை போன்று 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தேர்தலில் சீமான் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.