செந்தில் பாலாஜி,சேகர்பாபுக்கு எல்லாம் அமைச்சர் பதவி.! நினைச்சியிருந்தா எப்பவோ அமைச்சராகி இருப்பேன்-வேல்முருகன்
அதிமுகவில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கும், சேகர் பாபுவிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேல்முருகனும் -அரசியலும்
பாட்டாளி மக்கள் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் வேல்முருகன், தனது பேச்சு திறமையால் அனைவரையும் வெகுவாக கவர்வதில் முக்கிய பங்கு வகிப்பார். 2006-2011 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது சட்டப்பேரவையில் தங்கள் தொகுதி மக்களின் கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக கூறி நிறைவேற்றிக்கொள்வார். அந்தளவிற்கு செல்வாக்கு உடையவராக இருந்த வேல்முருகன், தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாமகவிற்கு போட்டியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கினார். இதனையடுத்து இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு திமுகவுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்த வேல்முருகன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகிவுள்ளார். இந்தநிலையில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வேல்முருகன், மத்திய அரசால் தமிழக மக்கள் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது..! கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி
தொடர்ந்து பேசியவர், பாமக கட்சியில் இணைவதற்க்கு முன்னால் திமுக குடும்பம் தான் எங்கள் குடும்பம் அந்த பழக்க வழக்கத்தின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்று என்னுடைய கட்சியை நான் உங்கள் கட்சியுடன் இணைக்கிறேன் எனக்கு ஒரு அமைச்சர் பதவி தாருங்கள் என்று கேட்டால் அவர் கொடுக்காமல் போய்விடுவாரா..? என கேள்வி எழுப்பினார். திமுகவில் இருக்கக்கூடிய பாதி அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து சமீப காலத்தில் வந்தவர்கள் என தெரிவித்தவர், அவர்களெல்லாம் என்னைப்போல பேச்சுத் திறமையோ அல்லது இளைஞர்களை அணிதிரட்டக்கூடிய வல்லமையோ பெற்றவர்கள் கிடையாது என குறிப்பிட்டார். அந்தந்த மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரியார் சிலையை உடைப்பதாக கூறியதில் என்ன தவறு உள்ளது...? முன்ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல்
வேல்முருகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதா..?
அதிமுகவில் இருந்து சமீபத்தில் வந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவில் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கும்போது வேல்முருகன் கேட்டால் கிடைக்காதா என கேள்வி எழுப்பினார். வேல்முருகனுக்கு பதவி,பணம் இது எதுவும் தேவை கிடையாது தமிழ் மக்கள் முன்னேற வேண்டும் அதுதான் என் குறிக்கோள் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அமைச்சர்களை விமர்சித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
பேனாவுக்குச் சிலைவைக்கப் பணம் இருக்கு.. ஆசிரியர்களை நியமிக்கப் பணமில்லையா? அசிங்கப்படுத்தும் சீமான்.