தனது நிறுவனத்தின் முதல் பட இயக்குநருக்கே அடுத்த படம் இயக்கும் வாய்ப்பை வழங்கி, அதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் இசைஞாநி இளையராஜாவின் இளைய ராஜா யுவன்.

 

இளன் என்கிற அறிமுக இயக்குநரை வைத்து ‘பியார் பிரேமா காதல்’ என்கிற செமி பிட்டுப்படம் ஒன்றைத்தயாரித்து அதை ஹிட்டுப் படமாக ஆக்கினார் யுவன் ஷங்கர் ராஜா. ’பிக்பாஸ்’ பிசாசுகள் ரைசா, ஹரிஷ் கல்யாண் பின்னிப்பிணைந்து நடித்த அந்தப் படம், முதலில் சுமாராக ஓடி, பின்னர் அதில் கையாளப்பட்ட செக்ஸ் கான்செப்டுக்காக ஹிட்டடித்தது. 

உடனே பட இயக்குநர் விலை உயர்ந்த கார் ஒன்றைப் பரிசளித்து, அப்போதே அடுத்த படத்துக்கு மறைமுகமாக அவரை கமிட் பண்ணி வைத்திருந்த யுவன் இன்று தனது இரண்டாவது பட அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். முதல் படத்தில் வசூல் ருசி கண்டதால் இரண்டாவதும் இதே செக்ஸ் சமாச்சாரக் கதையாகவே இருக்கக்கூடும் என்று நம்பப்படும் இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் உட்பட டெக்னீஷியன்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை.

 

‘பியார் பிரேமா காதல்’ வெளியீட்டில் கலந்துகொண்டு மகனை வாழ்த்திய ராஜா, ‘நீ கூட உன் படத்துல எனக்கு மியூசிக் பண்ண சான்ஸ் தரலையே’ என்று கலாய்த்ததை நினைவில் இந்தப் படத்திலாவது ராஜாவை இசையமைக்க ‘இளைய’ராஜா அழைக்கிறாரா என்பதை ஓரிரு நாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.