Asianet News TamilAsianet News Tamil

கார் விபத்தில் உண்மையில் நடந்தது என்ன? காருல ஏறவே பயமா இருக்கு! மனம் நொந்து இர்ஃபான் கொடுத்த விளக்கம்!

பிரபல youtuber இர்ஃபானின் கார் விபத்து சமீபத்தில் நடந்த நிலையில், அதில் ஒரு பெண் உயிரிழந்தார். இவருடைய கார் விபத்து குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக இர்ஃபான் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது  வைரலாகி வருகிறது.
 

youtuber irfan about Car Accident What Really Happened?
Author
First Published Jun 3, 2023, 8:51 PM IST

இந்த வீடியோவில், சமீபத்தில் நடந்த விபத்து குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விபத்து குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால், ரசிகர்கள் பலர் உண்மையாக என்ன நடந்தது என சொல்லுமாறு கேட்டுக் கொண்டீர்கள். அதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 25 மே அன்று, மருவீடு முடித்துவிட்டு தஞ்சாவூரில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தோம். திருமணம் முடிந்த புதிது என்பதால், தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று மறு வீடு முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தபோது, நான், என்னுடைய மச்சான், என்னுடைய தங்கை, மனைவி, உள்ளிட்ட குடும்பத்தினர் ஒரே காரில் வந்து கொண்டிருந்த போது, என்னுடைய மச்சான் தான் வண்டியை டிரைவ் பண்ணி கொண்டு வந்தார். சரியாக மறைமலை நகர் கிட்ட வரும்போது அங்கு தான் விபத்து ஏற்பட்டது.

youtuber irfan about Car Accident What Really Happened?

ரோபோ ஷங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வெக்க புன்னகையோடு வெளியிட்ட புகைப்படம்!

அங்கு சைடுல எல்லாம் பேரி கார்டு போட்டு இருந்தார்கள். அங்கிருந்து திடீரென ஒரு அம்மா வந்து விட்டார். இந்த விபத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மச்சான் வண்டியை திருப்பிய போதிலும், இந்த விபத்தை தவிர்க்க முடியவில்லை. அது ஒரு கிராசிங் ஆக இருந்திருந்தாலும் அந்த இடத்தில சிறு வெளிச்சம் கூட அங்கு இல்லை. அதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. எனினும் விபத்து ஏற்பட்டுவிட்டது.

இந்த விபத்தில் இறந்த அந்த பெண்மணியின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு வருந்தி இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இது போன்ற ஒரு விபத்தை சந்தித்த எங்களுக்கே இது மிகப் பெரிய இழப்பாக இருக்கும் நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எப்படி இருப்பார்கள். இந்த வீடியோவின் மூலம், முதலில் அவர்களின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

youtuber irfan about Car Accident What Really Happened?

இந்த விஷயத்தால் என்னுடைய குடும்பத்திலும் அனைவரும் உடைந்து போய்விட்டனர். இதனால் எங்களுடைய வாழ்க்கையிலும் அதை தவிர்த்து விட்டு செல்லமுடியவில்லை. தொடர்ந்து இந்த விபத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்துதான் வருகிறோம். அதிலும் நான் அந்த விபத்தை பின்னாடியில் இருந்து பார்த்தேன். இதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என் உடல் குலுங்குகிறது. காரில் ஏறுவதற்கே பயமாக இருக்கிறது.

கோரமண்டல் ரயில் விபத்து! வாய்திறக்காத ரஜினி, விஜய், சூர்யா! முதல் ஆளாக ஆறுதல் பதிவு போட்ட ராகவா லாரன்ஸ்!

என்னுடைய கார் விபத்தான அன்று மட்டும் அதே சாலையில் 4 விபத்து ஏற்பட்டது. ஆனால் யாருமே, எந்த செய்தி சேனலும் அந்த விபத்துகள் குறித்து பெரிதாக செய்திகள் வெளியிடவில்லை. தன்னுடைய கார் விபத்தை மட்டுமே அதிகம் ஃபேகஸ் செய்தனர். செய்திகள் வெளியிடுவது நல்ல விஷயம் தான் ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகளும் வெளியிடப்பட்டது. இப்படி பரவிய செய்திகளால் இன்னும் சில புதுப்புது பிரச்சனைகள் வருவது சரியான அல்ல. தற்போது, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லும். அதே போல் அடுத்து அடுத்தடுத்த பணிகளும் நடக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.

youtuber irfan about Car Accident What Really Happened?

மேலும் இரண்டு செய்தி சேனல்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியானது. என்னுடைய காரில் ஆவணங்கள் எதுவுமே இல்லை என கூறினார்கள். அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. என் தரப்பில் இருந்து கொடுக்க வேண்டிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டுளள்து என்றும், பலர் என்னை வேதனை படுத்தவேண்டும் என்பதற்காகவே சில கருத்துக்களை வெளியிட்டனர். அதே போல் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என சிலர் நம்பி பாசிட்டிவான கருத்துக்களை பதிவிட்டார்கள் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.  

களைகட்டும் காதல்! 45 வயதாகும் அஜித் மச்சினன் ரிச்சர்ட் மேல படுத்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் யாஷிகா!

குறிப்பாக இந்த ஒரு விபத்தில் இர்ஃபான் மனதளவில் எந்த அளவுக்கு வேதனை பட்டுள்ளார் என்பதை தாண்டி வெளியுலகத்தாலும், வேதனைப்படுத்த பட்டுள்ளார் என்பது அவரின் பேச்சில் இருந்தே தெரிகிறது.  நம்மையே அறியாமல் ஒரு சில விபத்துகள் நடப்பது வழக்கம் தான். இப்படி ஏற்படும் விபத்துகளில் நமக்கு அடிபட்டால் கூட தாங்கி கொள்ளலாம், ஆனால் நம்மால் ஒரு உயிரே போய்விட்டது என்றால் அந்த வேதனை எக்காலத்திலும் மனதை விட்டு நீக்காது என்பதே உண்மை. இர்ஃபான் பேச்சில் உள்ள வேதனையை புரிந்து கொண்டு, பலர் அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவாக பதிவு போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios