களைகட்டும் காதல்! 45 வயதாகும் அஜித் மச்சினன் ரிச்சர்ட் மேல படுத்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் யாஷிகா!
நடிகை யாஷிகா, தற்போது அஜித்தின் மச்சினனும், நடிகருமான ரிச்சர்ட் ரிஷி காதல் வலையில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி அஜித். இவரைப் போலவே இவரது சகோதரர் ரிச்சர்ட் ரிஷியும், தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், இதைத்தொடர்ந்து 'காதல் வைரஸ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து கிரிவலம், நாளை, யுகா, போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்த ரிஷியின் அடுத்தடுத்த படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில், போராடியும் ஹீரோவாக நிலைக்க முடியாத நிலையில், அந்தமான், பழைய வண்ணாரப்பேட்டை, பரமபத விளையாட்டு ஆகிய படங்களில், குணச்சித்திர நடிகராக நடிக்க துவங்கினார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிரவுட் ஃபண்ட் மூலமாக இயக்குனர் மோகன் ஜி இயக்கிய திரகுபதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, ரிச்சர்ட் ரிஷி திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைத்ததது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'ருத்ர தாண்டவம்' என்கிற படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் சில சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி, முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலித்தது. கம்பேக் மூலம் கிடைத்த வெற்றியை தக்க வைத்து கொள்ள, கதை தேர்வுகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரிச்சர்ட்... இப்போது காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கர்ப்பத்தை தொடர்ந்து காதலரோடு இணைந்து வெளியிட்ட மோதிர விரல் புகைப்படம்! அப்போ கல்யாணம் ஆகிடுச்சா?
ரிச்சர்ட் ரிஷி சமீபத்தில், நடிகை யாஷிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தார். அதில் யாஷிகா அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இருந்ததை கண்டு ரசிகர்கள் இருவரும் காதலித்து வருகிறார்களா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததோடு, இருவருக்கும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது யாஷிகா ரிச்சர்ட் மீது படுத்து கொண்டு போஸ் கொடுக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதை பார்த்ததும், வழக்கம் போல் ரசிகர்கள்..45 வயதாகும் ரிச்சர்ட் ரிஷி 23 வயது ஆகும் யாஷிகாவின் காதல் வளையல் சிக்கி விட்டார்... திருமணம் எப்போது என கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.