ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' வசூலை மிஞ்சிய ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்! முதல் நாள் வசூல் விவரம்!

'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'  மற்றும் 'வீரன்' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
 

kathar basha endra muthuramalingam and veeran first day box office details

நேற்று நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான  'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படமும் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'வீரன்' படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த இரு படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா கிராமத்து இளைஞராக நடித்து ரசிகர்கள் மனதை, கவர்ந்துள்ள திரைப்படம்  'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதுவரை ஆர்யா ஏற்று நடித்திடாத கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து,  கெத்து காட்டியுள்ளார் ஆர்யா. இந்த படத்தை, 'விருமன்' பட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார்.

kathar basha endra muthuramalingam and veeran first day box office details

என் மனைவி ஸ்ரீதேவிக்கு பின்... கீர்த்தி சுரேஷ் தான் இப்படி இருக்கிறார்! புகழ்ந்து தள்ளிய போனி கபூர்!

ஆர்யாவுக்கு ஜோடியாக,  சித்தி இட்னானி அழகை தாண்டி சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். மேலும் பிரபு, கே பாக்யராஜ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பொண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடக்கும் போராட்டமே இப்படம். ஏற்கனவே இதே சாயலில் படங்கள் வந்திருந்தாலும், புதுமையான விஷயங்களை புகுத்தி, பார்வையாளர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர். ஆர்யாவின் அதிரடி நடிப்பில் நேற்று வெளியான இப்படம், முதல் நாளில் சுமார் 3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

kathar basha endra muthuramalingam and veeran first day box office details

ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' படத்திற்கு 400 கோடி பணம்... 24 பர்சென்ட் வட்டிக்கு வாங்கப்பட்டதா? ராணா கூறிய தகவல்!

ஆர்யாவின் படத்திற்கு போட்டியாக, சூப்பர் மேன் கான்சப்ட்டை மையமாக வைத்து களமிறங்கிய திரைப்படம் 'வீரன்'.  சத்யஜோதி ஃபிலிம்ஸ், தயாரிப்பில் யூத் ஐகான் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ படமும் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்தில் ஒரு கிராமத்து இளைஞராகவும் சூப்பர் பவர் கொண்டவராகவும் நடித்துள்ளார். 

kathar basha endra muthuramalingam and veeran first day box office details

வசூலில் பிக் அப் ஆகாததால்... இன்று ஓடிடியில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம்!

மேலும்ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி, வினய், செல்வராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிராமத்து கோவிலை இடிக்க விடாமல் தடுக்க நடக்கும் போராட்டமே இப்படம். குழந்தைகளை கவரும் விதமான காமெடி மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ்.  இந்த படம் முதல் நாளில் மட்டும், சுமார்... 3.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யாவின் படத்தையே வசூலை மிஞ்சியுள்ள உள்ளது 'வீரன்'. நேற்று வெளியான இந்த இரு படங்களுமே  தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதாலும் வசூல் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios