இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது! கோரமண்டல் ரயில் விபத்து பற்றி கமல்ஹாசன் ட்வீட்!

நேற்று இரவு கோரமண்டல் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த்துள்ள நிலையில், இந்த விபத்து குறித்து... கனத்த மனதுடன் உலக நாயன் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
 

Kamal Haasan tweet for Coromandel Train Accident

நேற்று இரவு, எதிர்பாராத விதமாக... பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில், கோரமண்டல் ரயில் மற்றும்  பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 1000-திற்கும் மேற்பட்ட பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

பாலாசோரில் இந்த விபத்து நேற்று இரவு நடந்த நிலையில், இரவு நேரம் என்பதாலும்... காட்டு பகுதி என்பதாலும் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுளளதாக கூறப்படுகிறது. எனினும் 500க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். பத்திரமாக மீட்கப்பட்ட சிலர் விமானம் மூலம் அந்த இடத்தில் இருந்து அப்பூரப்படுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளது.

Kamal Haasan tweet for Coromandel Train Accident

பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

இந்த விபத்து தற்போது, இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சற்று முன்னர், இன்று மூன்று ரயில்கள் ஒரே இடத்தில் விபத்தில் சிக்கியது பற்றி, ட்விட்டரில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும்,  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

Kamal Haasan tweet for Coromandel Train Accident

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். 

ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' வசூலை மிஞ்சிய ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்! முதல் நாள் வசூல் விவரம்!

 உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்". என கூறியுள்ளார்.
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios