நேற்று இரவு, இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதி கொண்ட கோர விபத்து குறித்து, முதல் ஆளாக பதிவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ஒடிசா மாநிலம், பாலாசூர் மாவட்டம்... பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே, பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று எதிர்பாராத விதமாக மோதிக்கொண்ட விபத்தில், இதுவரை சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1000-திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர், இது போன்ற கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்துள்ளது. மேலும் அரசியல் வாதிகள் பலர், அறிக்கை மூலம் இந்த கோர ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
களைகட்டும் காதல்! 45 வயதாகும் அஜித் மச்சினன் ரிச்சர்ட் மேல படுத்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் யாஷிகா!

ஏற்கனவே நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் இந்த விபத்து குறித்து பதிவிட்டிருந்த நிலையில், ரஜினி, விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்கள் யாருமே இதுவரை ஒரு வார்த்தை கூட தங்களின் சமூக வலைத்தளத்தில் இந்த விபத்து குறித்து வாய் திறக்கவில்லை. இந்நிலையில் ஒரு நடிகராக, முதல் ஆளாக முந்தி கொண்டு... விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

நடிப்பை தாண்டி அரசியில் விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வரும் நடிகர்களான விஜய், ரஜினி, சூர்யா போன்றார்... ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும் வாய் திறக்காது ஏன்? என்று ராகவா லாரன்ஸ் போட்ட பதிவை சுட்டி காட்டி கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். இது போன்ற பேரிடர்களில் தான் மக்கள் மீது யார் யார்? எவ்வளவு அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
கர்ப்பத்தை தொடர்ந்து காதலரோடு இணைந்து வெளியிட்ட மோதிர விரல் புகைப்படம்! அப்போ கல்யாணம் ஆகிடுச்சா?

அந்த வகையில் கமல் ஒரு அரசியல்வாதிக்காகவும், நடிகராகவும் மக்கள் மீது அக்கறை உள்ளவர் என்பதை நிரூபித்து விட்டார். அவரை தொடர்ந்து... ராகவா லாரன்ஸ் தான் மக்கள் மீது அக்கறையை வெளிப்படுத்தும் நடிகராகி பதிவு போட்டுளளார். இவர் போட்டுள்ள பதிவில், "ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்" என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
