வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம், கொரோனாவை விட அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஊரடங்கில் அணைத்து படப்பிடிப்புகளும் முடங்கியதால், கிசு கிசு இல்லை என கவலை பட்டவர்கள் வெறும் வாய்க்கு அவளாக அமைந்துள்ளது இந்த செய்தி. இன்னும் தொலைக்காட்சியில் இந்த விஷயத்தை வைத்து விவாதம் நடத்தாது தான் குறை, மத்தபடி செம்ம ஹாட் டாப்பிக் இது தான்.

மேலும் செய்திகள்: வனிதாவை பச்சை, பச்சையாய் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்... எல்லாத்தையும் இழுத்து மூட அதிரடி முடிவு...!
 

இது குறித்து சோசியல் மீடியாவில் சில வனிதாவுக்கு, ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் வார்த்தைகள் தெளிவாக உள்ளதால் அவர் மீது எந்த தவறும் இல்லை என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இவருக்கு சப்போர் பேட்டி ஒன்றின் போது வனிதா, பீட்டர் பால் லிப்லாக் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா கண்டபடி விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். லஷ்மிக்கு ஆதரவாக பலரும் தொடர்ந்து வனிதாவை விமர்சித்தனர்.

மேலும் செய்திகள்: ஆணாக மாறிய குஷ்பு... அசப்பில் இந்த தமிழ் நடிகர் மாதிரியே இருக்காங்களே..! தீயாய் பரவும் புகைப்படம்...
 

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” எனக்கூறியிருந்தார். 

இதை பார்த்த வனிதா உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கும் தோணியில் பதிவிட, அந்த ட்வீட்டை நீக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் உடனடியாக வனிதாவிடம் மன்னிப்பு கோரினார். 

மேலும் செய்திகள்:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லம்போஹினி காரில்... மாஸ்க் போட்டுகொண்டு அவசர அவசரமாக சென்றது எங்கு தெரியுமா?
 

இதனிடையே ஆன்லைன் லைவ் பேட்டி ஒன்றில் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒன்றாக பங்கேற்றனர். அதில் வனிதாவோ, நீ என்ன பெரிய ஐகோர்ட் ஜட்ஜா?. சரி தான் போடி. உனக்கு குடும்பம் இல்லையா. நீ இயக்குநராக இருந்தால் படம் எடுடி என் வாழ்க்கையில் ஏன் தலையிடுகிற . நீ ரொம்ப பத்தினி. ஒருத்தனுக்கு ஒருத்தினு டிராமா போடாத. ஒரு புருஷன் இருப்பதால் நீ பெரிய ஒழுங்கா. என்கிட்ட பதில் சொல்லுடி, தைரியமா சொல்லுடி. நீ யாருன்னு எனக்கு தெரியும்  என லட்சுமி ராமகிருஷ்ணனை  சகட்டு மேனிக்கு கிழித்தெடுத்தார்.

அதே போல், பீட்டர் பால் முதல் மனைவிக்கு குரல் கொடுத்த நடிகை கஸ்தூரியையும், பிக்பாஸ் வீட்டில் அசிங்கப்பட்டது போதாதா என்றும், முதலில் நீ உன்புருஷன் கூட சேர்ந்து வாழுறத பாரு என கூறி, ஓவராகவே வார்த்தைகளை விட்டார்.

மேலும் செய்திகள்:கிழியும் பீட்டர் பால் முகத்திரை! அம்பலமாகும் காதல் லீலை... தயாரிப்பாளர் ரவீந்திரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 

ஆனால் தொடர்ந்து பீட்டர் பால், வனிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன் #ISupportElizabeth  என்கிற  ஹாஷ்டாக் ஒன்றையும் பதிவிட்டார். இதை தொடர்ந்து பலர் இவருக்கு ஆதரவு கொடுக்க துவங்கினர். இதனால் கடுப்பான வனிதா, ஒரேயடியாக ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளதாவது,  “ட்விட்டர் முழுக்க தனிப்பட்ட கொள்கைகளை வைத்துக் கொண்டு போலியான மனிதர்களாக இருக்கிறார்கள். மிகவும் குறைவான அளவில் மட்டுமே நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலான திரைபிரபலங்கள் தன்னை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்ள தந்திரமாக செயல்படுகிறார்கள். எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது நமது கலாச்சாரமோ பண்பாடோ அல்ல. போலியான நாடகங்கள் மற்றும் அருவருக்கத்தக்க ட்ரெண்டிங்கினால் நான் அப்செட்டாக இருக்கிறேன். நான் ஒருபோதும் போலியாக இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன். அதில் இருந்து சற்று விலகி இருக்கவே , இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.