கமல்ஹாசனின் பெரிய Fan Boy இயக்குனர் யார்?.. வைரலாகும் GVM மற்றும் லோகேஷ் போட்ட ட்வீட்ஸ்!
அவர் பேசி முடித்ததும் பேசிய லோகேஷ் "இருவரில் யார் பெரிய Fan Boy என்ற சண்டை வந்தால், சட்டையை கழட்டி கொண்டு சண்டைக்கு போவேன் என்று கூறினார்.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் அவர்கள் இருக்கும் கோலிவுட் உலகிலேயே பல முன்னணி நடிகர், நடிகைகள் அவர்களுக்கு விசிறிகளாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகர்களாக இருந்து வருபவர்கள் தான் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் லோகேஷ் கனகராஜ். அண்மையில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மணிகண்டன் "நான் தான் மிகப்பெரிய கமலின் Fan Boy என்றும், அந்த இடத்திற்கு லோகேஷ் வர நினைத்தால் சண்டை தான் நடக்கும் என்றும் கூறினார்.
அவர் பேசி முடித்ததும் பேசிய லோகேஷ் "இருவரில் யார் பெரிய Fan Boy என்ற சண்டை வந்தால், சட்டையை கழட்டி கொண்டு சண்டைக்கு போவேன் என்று கூறினார்.
இதையும் படியுங்கள் : நடிகை ஐஸ்வர்யா மேனன் - ஹாட்டாக ஒரு போட்டோஷூட்!
இந்நிலையில் ட்விட்டர் பகுதியில் கமலின் மிகசிறந்த FAN BOY டைரக்டர் யார் என்ற சண்டையில் கௌதம் வாசுதேவ் மேனன் தான் முதலிடத்தில் உள்ளார் என்று தோன்றுகிறது என்று கூறி, ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ் அவர்களை டேக் செய்ய, "இதில் சந்தேகமே வேண்டாம், கௌதம் வாசுதேவன் தான் சிறந்தவர் என்று அவருக்கு பதில் அளித்தார் லோகேஷ் கனகராஜ்.
திரும்ப அதற்கு ரிப்ளை செய்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் "நாயகன் மீண்டும் வரான்" என விக்ரம் படத்தில் நீங்களும் அவரும் வரும்வரை நான் அந்த இடத்தில் தான் இருந்தேன். ஆனால் இப்போது அந்த இடத்திற்காக இன்னும் அதிகம் முயற்சிக்க வேண்டியுள்ளது. இதில் சட்டைகள் கிழியாது, அன்பு மட்டுமே மிஞ்சும் என்று கெளதம் பதில் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : மாவீரன் பட விழாவுக்கு தொகுப்பாளர்கள் ரெடி. சர்ப்ரைஸ் வீடியோ இதோ