பளபளவென இருக்கும் பால்வண்ண மேனியை காட்டி... நடிகை ஐஸ்வர்யா மேனன் நடத்திய அல்டிமேட் போட்டோஷூட் போட்டோஸ் இதோ
நடிகை ஐஸ்வர்யா மேனன் பச்சை நிற உடையில் கவர்ச்சி பொங்க நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
iswarya menon
ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் முதலில் தீயா வேலை செய்யனும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்து வந்தார். இதையடுத்து சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்படம் 2 திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஐஸ்வர்யா, பின்னர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீரா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
iswarya menon
நடிகை ஐஸ்வர்யாவை பேமஸ் ஆக்கியது நான் சிரித்தால் திரைப்படம் தான். சுந்தர் சி தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் நடிகை ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா, பின்னர் அசோக் செல்வன் ஜோடியாக வேழம் படத்தில் நடித்த ஐஸ்வர்யாவுக்கு தெலுங்கு திரையுலகில் இருந்து பட வாய்ப்புகள் வந்ததால், டோலிவுட் பக்கம் சென்ற அவர் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக ஸ்பை என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 2023-ல் முதல்பாதி ஓவர்... தமிழ் சினிமாவின் 6 மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம்- முழு விவரம் இதோ
iswarya menon
ஸ்பை திரைப்படத்தை கேரி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் கடந்த ஜூன் 29-ந் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. வெளியான மூன்றே நாட்களில் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. ஸ்பை திரைப்படம் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன் தெலுங்கில் ஹீரோயினாக நடித்துள்ள முதல் திரைப்படம் ஆகும்.
iswarya menon
இப்படி பிசியான நாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன், சோசியல் மீடியாவிலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பால்வண்ண மேனியை பளீச் என காட்டியபடி நடிகை ஐஸ்வர்யா மேனன் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்துவரும் ரசிகர்கள், அந்த போட்டோவுக்கு லைக்குகளையும் அள்ளிக்குவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கால்ல விழுந்து கெஞ்சியும்... ஹன்சிகா காலை தடவ விடல! கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்