MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2023-ல் முதல்பாதி ஓவர்... தமிழ் சினிமாவின் 6 மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம்- முழு விவரம் இதோ

2023-ல் முதல்பாதி ஓவர்... தமிழ் சினிமாவின் 6 மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம்- முழு விவரம் இதோ

2023-ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 6 மாதங்களில் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 02 2023, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

2023-ம் ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல இருந்தது. ஆனால் அதற்குள் ஆறு மாதங்கள் விறுட்டென ஓடிவிட்டன. இந்த ஆறு மாதத்தில் தமிழ் சினிமா பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு ஸ்பெஷல் ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த வருடம் தான் இளம் இயக்குனர்கள் இயக்கிய படங்கள் வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வருகின்றன. அப்படி இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

1. பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் 2. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.345 கோடி வசூலித்து, இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

39

2. வாரிசு

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரூ.306.2 கோடி வசூல் உடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறையில் திரைக்கு வந்தது.

49

3. துணிவு

அஜித் நடித்த துணிவு திரைப்படம் தான் இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இப்படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகி இருந்தது. எச்.வினோத் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 215 கோடி வசூல் ஈட்டியது.

59

4. வாத்தி

2023-ல் அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் தனுஷின் வாத்தி திரைப்படம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. வெங்கி அட்லூரி இயக்கிய இப்படம் ரூ.105.85 கோடி வசூலித்து இருந்தது.

இதையும் படியுங்கள்... கால்ல விழுந்து கெஞ்சியும்... ஹன்சிகா காலை தடவ விடல! கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்

69

5. விடுதலை பாகம் 1

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் விடுதலை, சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60.6 கோடி வசூலித்து இருந்தது. இது 5-ம் இடத்தில் உள்ளது.

79

6. போர் தொழில்

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த போர் தொழில் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்திற்கு 6-ம் இடம் கிடைத்துள்ளது.

89

7. பிச்சைக்காரன் 2

விஜய் ஆண்டனி முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் தான் பிச்சைக்காரன் 2. கடந்த மே மாதம் திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.44 கோடி வசூலித்து ஏழாம் இடம் பிடித்துள்ளது.

99

8. பத்து தல

முஃப்டி என்கிற கன்னட படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பத்து தல. சிம்பு நாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இப்பட,ம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.38.15 கோடி வசூலித்துள்ளது.

இதையும் படியுங்கள்... இந்த காதலும் கசந்துவிட்டதா... காதலனுடன் பிரேக்-அப் ஆனதால் பாதியில் நின்றுபோன பிக்பாஸ் ஆயிஷாவின் திருமணம்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved