மாவீரன் பட விழாவுக்கு தொகுப்பாளர்கள் ரெடி... பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ இதோ

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற உள்ள நிலையில், அதன் தொகுப்பாளர் யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது.

BiggBoss Raju and Bhavana ready to host Maaveeran pre release event

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் மாவீரன். யோகிபாபு நடிப்பில் வெளியாகி இரண்டு தேசிய விருதுகளை வென்ற மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். விருமன் படத்திற்கு பின் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

மாவீரன் திரைப்படம் ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. இதில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சுனில், சரிதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஏற்கனவே வெளியன இப்படத்தின் சீனு சீனு மற்றும் வண்ணாரப்பேட்டையில ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன.

இதையும் படியுங்கள்... இந்த காதலும் கசந்துவிட்டதா... காதலனுடன் பிரேக்-அப் ஆனதால் பாதியில் நின்றுபோன பிக்பாஸ் ஆயிஷாவின் திருமணம்?

மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், இன்று முதல் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளன. அதன்படி இன்று மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சியில் மாவீரன் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சியை பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவும், பாவனாவும் தான் தொகுத்து வழங்க உள்ளார்களாம். இதுகுறித்து சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... 2023-ல் முதல்பாதி ஓவர்... தமிழ் சினிமாவின் 6 மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம்- முழு விவரம் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios