Varalaxmi Sarathkumar : யானைக்கு உணவூட்டும் வரலட்சுமி...வைரலாகும் க்யூட் வீடியோ
வரலட்சுமி சமீபத்தில் யானை முகாமிற்கு சென்று அங்குள்ள யானைகளுடன் விளையாடியதும், உணவு ஊட்டியதும் குறித்தான வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முன்னாள் மனைவி சாயாவுக்கு முதல் மகளாக பிறந்தவர் தான் வரலட்சுமி. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்திற்காக வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரது தந்தையின் கோரிக்கையை அடுத்து அந்த படத்தில் நடிப்பதை நிராகரித்து விட்ட இவர் பின்னர் காதல், சரோஜா உள்ளிட்ட படங்களையும் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான முதல் படமான போடா போடியில் நாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கோவக்கார பெண்ணாக நடித்திருப்பார். லண்டனை சேர்ந்த நடன கலைஞராக இவர் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். பின்னர் வெளியான மதகஜராஜாவில் விஷாலுடன் பணியாற்றினார் வரலட்சுமி.
மேலும் செய்திகளுக்கு...8 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதும் அஜித் - விஜய் திரைப்படங்கள்..முந்தைய படங்கள் எவை தெரியுமா?
பாலாவின் தாரை தப்பட்டை படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது என்றே சொல்லலாம். கரகாட்டம் ஆடும் பெண்ணாக அரைகுறை ஆடையுடன் வந்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இருந்தார். பின்னர் இவருக்கு மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது. இரண்டு கன்னட படங்களில் நடித்த பின் மீண்டும் விக்ரம் வேதா, நிபுணன். mr சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சண்டைக்கோழி 2 -ல் விஷாலுக்கு வில்லியாக நடித்திருந்த வரலட்சுமிக்கு மீண்டும் அதே போன்ற எதிர்மறை கேரக்டர்களே கிடைத்தது. சர்க்கார் படத்தில் விஜக்கு வில்லியாக வந்து மிரட்டி இருந்தார். அரசியல் தலைவரின் மகளாக ராஜதந்திரியாக தோன்றி பலரின் பாராட்டுகளையும் பெற்ற வரலட்சுமி. மாரி 2 வில் விசாரணை அதிகாரியாக நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்
நீயா 2, கன்னி ராசி, சிங்க பார்வை உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்த இவர் சமீபத்தில் வெளியான இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இதில் ஒரே ஷாட்டில் உருவான இரவில் நிழல் படத்தில் போலி சாமியாருடன் இருக்கும் சீடராக இவர் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். இதை தொடர்ந்து தற்போது சமந்தா நடித்து வரும் யசோதா படத்தில் மதுபாலாவாக தோன்றியுள்ளார். இந்த படம் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறது.
மேலும் செய்திகளுக்கு..தன்னுடைய பெயர் கனடாவை செழிப்பாக்கட்டும்..ஏ.ஆர் . ரஹ்மானின் உருக்கமான பதிவு
அதோடு பாம்பன், பிறந்தால் பராசக்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் காமிட் ஆகியுள்ளார். இதில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் நடித்து வருகிறார். தமிழைப் போலவே இவருக்கு தெலுங்கிலும் ஏகபோக வரவேற்பு உள்ளது. இதற்கிடையே தனது உடல் எடையை பாலிவுட்நாயகிகள் போல ஒல்லி பெல்லியாக மாற்றிய இவர் அது குறித்தான வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்றிருந்தார். இதை அடுத்து கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த வரலட்சுமி சமீபத்தில் யானை முகாமிற்கு சென்று அங்குள்ள யானைகளுடன் விளையாடியதும், உணவு ஊட்டியதும் குறித்தான வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த காணொளி வைரலாகி வருகிறது.