தன்னுடைய பெயர் கனடாவை செழிப்பாக்கட்டும்..ஏ.ஆர் . ரஹ்மானின் உருக்கமான பதிவு
கனடா மார்க்கம் நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு தன பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசை அமைப்பாளராக பரிமாணித்தவர் ஏ ஆர் ரகுமான். இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல ரோல்களில் தோன்றி வரும் இவர் இந்திய அரசின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூஷன் விருதை பெற்றுள்ளார். அதோட ஆறு தேசிய விருதுகளையும், இரண்டு அகடாமி விருதுகளையும், கிராமிய விருதுகள் உட்பட பல விருதுகளை தன் சொந்தமாக்கி உள்ளார் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான்.
90களில் வெளியான பல பாடல்களுக்கு இவருடைய இசை தான். தனித்துவமான இசையால் ரசிகர்களை வசீகரித்த ஏ ஆர் ரகுமான் பாடியிருந்த சிங்க பெண்ணே பாடல் பெண்களின் புகழாரம் ஆகவே மாறிவிட்டது. தற்போது பொன்னியின் செல்வன் கோப்ர உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது. இதில் மீண்டும் மணிரத்தினத்துடன் பொன்னியின் செல்வன் மூலம் கைகோர்த்துள்ள ஏ ஆர் ரகுமானின் வரலாற்று சிறப்புமிக்க பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
மேலும் செய்திகளுக்கு..ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்ற செல்வராகவனின் பகாசூரன் டீசர் !
அதேபோல கோப்ரா படத்திலிருந்து மிகப்பெரிய இசை வெளியீட்டு விழா மூலம் ஏ ஆர் ரகுமான் கம்போஸில் உருவான பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் மிகப் பிரபலமான ஏ ஆர் ரஹ்மானுக்கு கன்னட அரசு சிறப்பு அங்கீகாரம் ஒன்றை அளித்துள்ளது. அதாவது கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு ஏ ஆர் ரகுமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...Pooja Hegde : குட்டை டவுசர்.. கையில் கேமரா..கண்ணால் கவரும் விஜய் பட நாயகி
இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், கனடா மார்க்கம் நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு தன பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் அந்த பதிவில், இதை என் வாழ்நாளில் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கனடாவின் மார்க்கம் மேயர், ஆலோசகர்கள், இந்திய தூதரக ஜெனரல் மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய பெயர் அல்ல அதற்கு "இரக்கமுள்ளவர்" என்று அர்த்தம். . “இரக்கமுள்ளவர் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கடவுளின் குணம், ஒருவர் இரக்கமுள்ளவரின் ஊழியராக மட்டுமே இருக்க முடியும். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என பேசியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...பாக்கெட் வெளியில் தெரியுமா அளவிற்கு குட்டை டவுசருடன் சுற்றி திரியும் தனுஷ் பட நாயகி