8 ஆண்டிற்கு பிறகு மீண்டும் மோதும் அஜித் - விஜய் திரைப்படங்கள்..முந்தைய படங்கள் எவை தெரியுமா?

தற்போது உருவாகி வரும் வாரிசு மற்றும்  அஜித் 61 படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளது குறித்த தகவல் தீயாக பரவி வருகிறது. 

 varisu AK 61 release in pongal 2023 ajith and vijay movies that released on same day

அஜித் நடித்து வரும் ஏகே 61 படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது முன்னதாக தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் தற்போது படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு தான் என கூறப்படுகிறது.  தற்போது இதற்கிடையே விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு படமும் பொங்கல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கபட்டு விட்டது. 

 இந்த சூழலில் தமிழ் சூப்பர் ஹீரோக்களான இவர்களது முந்தைய ஒரே நாளில் வெளியான படங்கள் குறித்த தகவலை இங்கு பார்க்கலாம் ... கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த பகவதி, அஜித் நடித்த வில்லன் ஆகிய படங்கள் நவம்பர் 4-ம் தேதி வெளியாகியிருந்தது. இதில் பகவதி படத்தை வெங்கடேஷ் இயக்கியிருந்தார். அஜித் நடிப்பில் வெளியான வில்லன் படத்தை கே எஸ் ரவிக்குமார் உருவாக்கி இருந்தார். இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் விஜய் நடித்த பகவதி வசூல் ரீதியில் தோல்வியை சந்தித்தது.

மேலும் செய்திகளுக்கு...என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்

 varisu AK 61 release in pongal 2023 ajith and vijay movies that released on same day

திருமலை, ஆஞ்சநேயா  :

பின்னர் திருமலை, ஆஞ்சநேயா  இருப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகியிருந்தது. அக்டோபர் 23ஆம் தேதி வெளியான இந்த படங்களில் அஜித்தின் ஆஞ்சநேயா பெரும் தோல்வியை சந்தித்ததாகவும் ,விஜயின் திருமலை படம் கலையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது.

மேலும் செய்திகளுக்கு..தன்னுடைய பெயர் கனடாவை செழிப்பாக்கட்டும்..ஏ.ஆர் . ரஹ்மானின் உருக்கமான பதிவு

ஆதி - பரமசிவம் :

நடிகர் அஜித்தின் பரமசிவனமும், விஜயின் ஆதியும் இணைந்து ஜனவரி 14 பொங்கல் சிறப்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதில் ஆதி பெரும் தோல்வியை தழுவியது. அதே சமயத்தில் அஜித்தின் பரமசிவம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.

போக்கிரி - ஆழ்வார் :

பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படமும், அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் படமும் ஜனவரி 12-ம் தேதி 2007 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. தெலுங்கு ரீமேக்கான போக்கிரி படம் நல்ல வெற்றிகளை கண்ட போதிலும் அஜித்தின் ஆழ்வார் படமோ பெரிதாக பேசப்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு...Pooja Hegde : குட்டை டவுசர்.. கையில் கேமரா..கண்ணால் கவரும் விஜய் பட நாயகி

ஜில்லா - வீரம் :

நடிகர் அஜித்தின் வீரம் மற்றும் நடிகர் விஜயின் ஜில்லா திரைப்படங்கள் 2014 பொங்கல் அன்று வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் மற்றும் விஜயின்  ஜில்லா  இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றன. ஆனால் விமர்சன ரீதிகள் அஜித் நடித்த வீரம் படமே வென்றது. இந்நிலைகள் தற்போது உருவாகி வரும் வாரிசு மற்றும்  அஜித் 61 படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளது குறித்த தகவல் தீயாக பரவி வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios