சொன்னபடியே படக்குழுவினர் சற்றுநேரத்திற்கு முன்பு கோப்ரா பட டீசரை வெளியிட்டுள்ளனர்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் நடிப்பதை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்தனர். அதையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான தும்பி துள்ளல் பாடல் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
இதையும் படிங்க: கோலிவுட் ஹீரோவாகும் விஜய் டி.வி. பிரபலம்... எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு...!
தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளான ஜனவரி 6ம் தேதி அன்று கோப்ரா படக்குழு அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வரும் 9ம் தேதி கோப்ரா படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். சொன்னபடியே படக்குழுவினர் சற்றுநேரத்திற்கு முன்பு கோப்ரா பட டீசரை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்... முதல்வரிடம் இருந்து வந்த அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி....!
டீசரை பார்க்கும் போது விக்ரம் மதி என்ற கணக்கு வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தெரிகிறது. அதேபோல் கணக்கை வைத்து விதவிதமான கெட்டப்புகளில் க்ரைம் சம்பவங்களில் ஈடுபவது போலவும், அதனைக் கண்டுபிடிக்கும் அதிகாரியாக இர்பான் பதான் நடித்துள்ளதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. நடிப்பில் வேற லெவலுக்கு மிரட்டி இருக்கும் விக்ரமின் கோப்ரா பட டீசர் வெளியான அரை மணி நேரத்திலேயே 4.5 லட்சம் வியூஸ்களையும், 1.69 லட்சம் லைக்குகளையும் அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ இதோ...
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 9, 2021, 11:50 AM IST