கோலிவுட் ஹீரோவாகும் விஜய் டி.வி. பிரபலம்... எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு...!
சிவகார்த்திகேயன், ரியோ, கவின் ஆகியோரைத் தொடர்ந்து மற்றொரு விஜய் தொலைக்காட்சி பிரபலமும் வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளார்.
சிவகார்த்திகேயன், ரியோ, கவின் ஆகியோரைத் தொடர்ந்து மற்றொரு விஜய் தொலைக்காட்சி பிரபலமும் வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளார். தற்போது சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சித்தார்த் குமரன் விரைவில் கோலிவுட்டில் கோலோச்ச உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஜோடி நம்பர் 1”, “டான்ஸ் ஜோடி டான்ஸ்” உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து ‘என் பெயர் மீனாட்சி’,‘ஆபீஸ்’, ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சீரியல்கள் மூலமாக ரசிகர்களை மனதில் இடம் பிடித்தவர் சித்தார்த் குமரன்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தேன்மொழி பி.ஏ.” தொடரில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகர் என பன்முக தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் சித்தார்த் குமரன் விரைவில் கோலிவுட் படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் வெற்றிகரமாக கோலிவுட்டில் கால் பதிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.