ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்... முதல்வரிடம் இருந்து வந்த அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி...!
First Published Jan 9, 2021, 11:18 AM IST
விஜய் ரசிகர்கள் ஊர் முழுக்க ஓட்டிய போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான நிலையில், இப்படியொரு அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

பொங்கல் விருந்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும், சிம்புவியின் ஈஸ்வரனும் திரைக்கு வர உள்ளது. இதனால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்தால், கொரோனா காலத்தில் இழந்த வாழ்வாதாரத்தை மீட்கலாம் என தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கைவைத்து வந்தனர்.

இதனிடையே நடிகர் விஜய்யும் கடந்த மாதம் யாருக்கும் தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது தனது படத்திற்காக எவ்வித சலுகையும் கேட்காத அவர், தியேட்டர்களில் 100 சதவீத அனுமதிக்கு உத்தரவிட்டால் ஊழியர்கள், உரிமையாளர்களின் நலன் காக்கப்படும் என கோரிக்கை வைத்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?