கைதி பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கறுப்பு நிற கோர்ட், சூட்டில் சும்மா ஜம்முன்னு பங்கேற்றார் விஜய். மேலும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதையும் படிங்க: “மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன்”... லோகேஷ் கனகராஜை பங்கமாய் கலாய்த்த தளபதி...!

இந்த விழாவில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த படி விஜய், விஜய் சேதுபதியின் பேச்சு செம்ம மாஸாக இருந்தது. அதிலும் விஜய் சேதுபதியின் பேச்சில் அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. மேடையேறியதும் விஜய் பேசிய முதல் விஷயம், ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தது தான். 

இதையும் படிங்க: கொரோனாவை விட கொடியதாம்... மதவாதிகளுக்கு விஜய் சேதுபதி வைத்த குட்டு..!

அனிருத் முதல் இறுதியாக பேசிய விஜய் வரை ஒவ்வொருவரும் மாஸ்டர் ஷூட்டிங் குறித்து தங்களது பங்கிற்கு சுவாரஸ்யமான தகவல்களை கொடுத்து ரசிகர்களை குஷியாக்கினர். விழாவும் மிகவும் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. ஓ.கே. விழா சூப்பராக முடிந்துவிட்டது, அதை கொண்டாட வேண்டாமா?... மாஸ்டர் படத்திற்கு புகழே நம்ம தளபதி நெய்வேலி ஷூட்டிங்கில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அந்த மாஸ்டர் செல்ஃபி தான். 

இதையும் படிங்க: விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஏன் ஒத்துக்கிட்டார் தெரியுமா?.... விழா மேடையில் உண்மையை போட்டுடைத்த விஜய்...!

விழா முடிந்த கையோடு மாஸ்டர் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள், இசையமைப்பாளர் அனிருத், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் லலித், சேவியர் பிரிட்டோ என அனைவரும் ஒன்றாக நிற்க, விழா அரங்கையே கவர் செய்யும் அளவிற்கு மாஸ்டர் செல்ஃபி ஒன்றை எடுத்தார் விஜய். அந்த செல்ஃபி தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.