லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் இறுதியாக நடிகர் விஜய் பேசினார். அப்போது மாஸ்டர் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை கூறினார். அதில் விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி குறைவாகவே பேசியிருந்தாலும், சூப்பரான விஷயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். 

இதையும் படிங்க: கொரோனாவை விட கொடியதாம்... மதவாதிகளுக்கு விஜய் சேதுபதி வைத்த குட்டு..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. அவர் நினைச்சிருந்தால், இந்த படத்தில வில்லனா நடிக்க முடியாதுன்னு சொல்லியிருக்க முடியும். இதை நான் ரொம்ப நாளாக கேட்கனும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஒரு நாள் அவர்கிட்ட கேட்டேன். நீங்க ஏன் இந்த படத்துல நடிக்க ஒத்துக்கிட்டீங்கன்னு??.

அதுக்கு அவர் ஒரு பதில் சொன்னாரு பாருங்க. ஒரு ஸ்மைல் பண்ணிட்டு, என்னன்னா, எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கு..ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு. என்னடா இவரு நாளே வார்த்தையில் சொல்லிட்டாரே. அப்புறம் தான் புரிஞ்சிது, உங்க பெயரில் மட்டுமில்ல, உங்க மனசிலும் எனக்கு இடம் கொடுத்திருக்கீங்கன்னு. ரொம்ப நன்றி நண்பா என்று நெகிழ்ச்சியாக கூறினார். 

இதையும் படிங்க: “மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன்”... லோகேஷ் கனகராஜை பங்கமாய் கலாய்த்த தளபதி...!

இதற்கு முன்னதாக பேசிய விஜய் சேதுபதி, விஜய் சார் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க மேல எனக்கு எவ்வளவு லவ் இருக்குங்கிறது நான் கொடுத்த முத்தத்திலேயே தெரிஞ்சிருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.