லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஜய் சேதுபதியின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. 

இதையும் படிங்க: “மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன்”... லோகேஷ் கனகராஜை பங்கமாய் கலாய்த்த தளபதி...!

விஜய் சேதுபதியின் வெகு இயல்பான பேச்சு அவரை மற்ற நடிகர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டிவிடுகிறது. எவ்வளவு பிசியாக ஷூட்டிங்கிற்கு பறந்து கொண்டிருந்தாலும், ரசிகர்கள் யாராவது செல்ஃபி கேட்டால் கூட எடுத்துவிட்டு தான் கிளம்புவார். அந்த அளவிற்கு ரசிகர்கள் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். குறிப்பாக மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று கொள்கை கொண்டவர். இதை மாஸ்டர் விழாவில் அவரே கூறியிருந்தார். 

முதலில் தனது வழக்கமான காமெடி பாணியில் தொடங்கிய விஜய் சேதுபதியின் பேச்சில் காரசாரமான நெடி தென்பட்டது. அதில் முக்கியமானது விஜய் சேதுபதி கடைசியாக பேசிய அந்த 2 விஷயங்கள். முதலில் கொரோனா வைரஸ், தமிழில் ஒரு அழகான வார்த்தை இருக்கு. ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைன்னா. குணமாகிட்டாருன்னு கேட்பாங்க. குணம் என்றால் மனசு. அந்த மனசு ஸ்ட்ராங்கா இருந்தால் எந்த வியாதியும் வராது. இந்த சமயத்தில் மனிதனை காப்பாத்த மனுஷன் தான் வருவான். மேல இருந்து ஒன்னு வராது. கொரோனா வந்திடுமோன்னு சொந்தக்காரங்களே தொட்டு பேச பயப்படும் போது, கொரோனோ வைரஸுக்கு தொட்டு மருத்துவம் பார்க்குற மருத்துவர்களுக்கு நான் நன்றி சொல்லிக்குறேன் என கூறினார். 

இதையும் படிங்க: விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஏன் ஒத்துக்கிட்டார் தெரியுமா?.... விழா மேடையில் உண்மையை போட்டுடைத்த விஜய்...!

இரண்டாவது ஒரு வைரஸ் இருக்கு... அது என்ன வைரஸ் என்று தெரியவில்லை. சாமிக்காக சண்டை போட்டுக்கொள்கிறார்கள். எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க சாமி இங்க பல கோடி வருஷமா இருக்கு. அதை சாதாரண மனுஷனால் காப்பாத்த முடியாது. சாமி இன்னும் சாமியை காப்பாத்துற மகா மனுஷன படைக்கவே இல்ல. சாமி தன்னை காப்பாத்திக்கும், சாமியை காப்பாற்றுவதாக சொல்லுற எந்த கூட்டத்து உடனும் சேரவே சேராதீங்க. அது ரொம்ப முக்கியம். கடவுள் மேல இருக்கான்... மனிதன் தான் இங்கே வாழ்கிறான். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும். மேல இருந்து எதுவும் வந்து காப்பாத்தாது. மதத்தின் பெயரை சொல்லி கடவுளை பிரிக்கிறார்கள். மதம் அவசியம் இல்லாதது... நம்புங்க ப்ளீஸ் என்று கடவுளை சாக்காக வைத்து மக்களை பிரிக்க நினைக்கும் மதவாதிகளுக்கு சரியான பஞ்சை சொல்லி தனது பேச்சை முடித்துக்கொண்டார்.