லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் இறுதியாக நடிகர் விஜய் பேசினார். அப்போது மாஸ்டர் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை கூறினார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசும் போது மாநகர படத்தில திரும்பி பார்க்க வச்சாரு, கைதியை திரும்ப, திரும்ப பார்க்க வச்சாரு, மாஸ்டர் படத்த என்ன பண்ணி வச்சியிருக்காருன்னு தெரியல. உங்கள மாதிரி நானும் பைனல் அவுட் பார்க்க ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். 

இதையும் படிங்க: விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஏன் ஒத்துக்கிட்டார் தெரியுமா?.... விழா மேடையில் உண்மையை போட்டுடைத்த விஜய்...!

லோகேஷ் பத்தி இங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். ஷூட்டிக் ஆரம்பிச்சி முதல் இரண்டு நாள் வருவாரு. கையில் எந்த சீன் பேப்பரும் இருக்காது. சார் நீங்க அந்த மாதிரி பேசுறீங்க. அதுக்கு அவரு இந்த மாதிரி பேசுவாருன்னு சொல்லுவாரு. நான் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். டேய்... எந்த மாதிரிடா?. நானும் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். சீன் பேப்பர தரமாட்டேங்குறான். இவன் கூற எப்படி நாளைச்சு மாசத்துக்கு ஓட்டுறது. நீ எங்க எல்லாருக்கும் சீன் பேப்பர் கொடுத்துடுன்னு சொன்னேன். 

இதையும் படிங்க: கொரோனாவை விட கொடியதாம்... மதவாதிகளுக்கு விஜய் சேதுபதி வைத்த குட்டு..!

டெய்லி வருவான் சார், சீன் பேப்பர்... சார் சீன் பேப்பர்ன்னு நீட்டுவான். நான் நினைப்பேன். இவன் நார்மலா பண்றானா இல்ல நம்மள கலாய்க்கிறானா, கிண்டல் பண்றானா, இல்ல ஓட்றானான்னு நினைப்பேன் என்று லோகேஷ் கனகராஜ் குறித்து ஜாலி மூமெண்ட்களை படு காமெடியாக பகிர்ந்து கொண்டார்.