உலக மக்களை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் திரையுலக பணிகள் முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால், திரையுலகை நம்பி தங்களுடைய அன்றாட பிழைப்பை நடத்தி வந்த, அடித்தட்டு சினிமா தொழிலாளர்கள் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு, திரையுலகை சேர்ந்த பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.

மேலும் செய்திகள்: இளையராஜாவின் வலது கை போல் இருந்த பிரபல இசை கலைஞர் காலமானார்! மனைவி இறந்த 2 மாதத்தில் நேர்ந்த சோகம்!
 

இந்நிலையில், மே 11ஆம் தேதி முதல், திரையுலகில் சமூக விலகலை கடைபிடித்து செய்யக்கூடிய  பணிகளான டப்பிங், விஷுவல் எபக்ட் போன்ற பணிகள் மீண்டும் துவங்கப்பட்டிருக்கிறது. இதனால் அணைத்து தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்காவிட்டாலும் 25 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

கொரோனா பிரச்சனை சற்று தணிந்த பின், மீண்டும் ஷூட்டிங் உள்ளிட்ட திரையுலக பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அணைத்து பணிகளும் முடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ள படத்தின் ரிலீஸ் குறித்தும் செய்திகள் வெளியாக வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்: 37 வருடத்திற்கு பின் உருவாகிறது ’முந்தானை முடிச்சு’ ரீமேக்...! பாக்யராஜூடன் இணையும் முன்னணி நடிகர்!
 

அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'இடம் பொருள் ஏவல்' படம் அணைத்து பணிகளும் முடிந்து, ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த படத்தை வெளியிடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாம் படக்குழு. எனவே திரையரங்கம் திரைக்கப்பட்டதும் ஒரு வேலை ரிலீஸ் ஆக  கூடிய முதல் படம் இதுவாக கூட இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: அடேங்கப்பா... அந்த இடத்தில் எம்மா பெரிய டாட்டூ..! ரீஎண்ட்ரிக்கு வெறித்தனமாக தயாரான லட்சுமி மேனன்!
 

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசமி தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.