அடேங்கப்பா... அந்த இடத்தில் எம்மா பெரிய டாட்டூ..! ரீஎண்ட்ரிக்கு வெறித்தனமாக தயாரான லட்சுமி மேனன்!

சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளியான நடிகை லட்சுமி மேனன். 
 

actress lakshmi menon new tattoo photos goes viral in social media

சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளியான நடிகை லட்சுமி மேனன். 

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய இந்த படத்தில், சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன்.  முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பாவாடை தாவணியில் தோன்றி, தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் லட்சுமி மேனன். மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ’கும்கி’,  ’பாண்டியநாடு’,  ’ஜிகர்தண்டா’,  ’மஞ்சப்பை’ போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.

actress lakshmi menon new tattoo photos goes viral in social media

ஏற்றம் கண்டு வந்து, லட்சுமி மேனனுக்கு புதுமுக நடிகைகளின் வரவால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. குறிப்பாக 'வேதாளம்' படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தபின், தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்புகள் வந்ததால், படிப்பை காரணம் காட்டி தமிழ் திரையுலகை விட்டு விலகினார். இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய, ’ரெக்க’ படம் வெளியானது. இந்த படத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை அடுத்து இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த ’ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் ஒரு சில காரணத்தால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. 

actress lakshmi menon new tattoo photos goes viral in social media

இதைத்தொடர்ந்து,  கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க தயாரானார் லட்சுமி மேனன்.

ஏற்கனவே கௌதம் கார்த்திக் கடந்த ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக, இருவரும் கைகோர்க்க உள்ளனர். இந்த படத்தில் தான் லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே குட்டிப்புலி, கொம்பன், ஆகிய படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress lakshmi menon new tattoo photos goes viral in social media

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் டபுள் ஹீரோயின் கான்செப்ட் படத்திலும் லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்த படங்கள், தற்போது கொரோனா பிரச்சனை முடிவடைந்த பின்னர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரீ-என்ட்ரிக்காக வெறித்தனமாக தயாராகி உள்ளார் லட்சுமி மேனன். அவர் தன்னுடைய முதுகில் மிகப்பெரிய தாமரை பூ டிசைன் கொண்ட டாட்டூ குத்தி  உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios