இசையமைப்பாளர் இளைய ராஜாவின், கலை குழுவில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு குடும்ப உறுப்பினர் போல், இருந்த புருஷோத்தமன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

65 வயதாகும் இவர், இசைஞானி இளையராஜாவின் குழுவில், 'அன்னக்கிளி' படத்தில் இருந்தே  பணியாற்றி வருகிறார். மேலும் டிரம்ப் கலைஞராகவும், மியூசிக்  கன்டக்டராகவும் பணியாற்றி வந்தார். 

 மியூசிக் கன்டக்டர் என்பது, இசை துறையில் எவ்வளவு முக்கியமான பொறுப்பு என்பது, இசை பணியை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். எத்தனை இசை கலைஞர்கள் இருந்தாலும் அவர்கள் முன் நின்று, சைகை மூலம் அவர்களுக்கு இசையை புரிய வைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அப்படி பட்ட மிக பெரிய பொறுப்பை, இசை ஞானியிடம் வகித்து வந்தவர் தான் புருஷோத்தமன். 

கடத்த சில வருடங்களாகவே, வயது மூப்பினால் வரும் பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த, புருஷோத்தமன்... நேற்று (மே 19 ) ஆம் தேதி திடீர் என உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவரின் மனைவி கடந்த இரு மாதத்திற்கு முன் தான் காலமானார். எனவே அடுத்தடுத்து  இரு இழப்புகளை சந்தித்துள்ள அவருடைய இரு மகன்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இடைவிடாமல், கடந்த பல வருடங்களாக இளைய ராஜாவின் வலது கை போல் இருந்த இவருக்கு தொடர்ந்து பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.