'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் தன்னுடைய இயக்குனர் பணியை, கடந்த 1974 ஆம் ஆண்டு துவங்கியவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். நடிகர் சுதாகர் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில், பாக்யராஜும் நடித்திருந்தார். பின், அந்த ஏழு நாட்கள், விடியும் வரை காத்திரு', 'ஒரு கை ஓசை' என அடுக்கடுக்காக பல படங்களை இயக்கி பிரபலமானார். இந்த படங்கள் இவரை சிறந்த இயக்குனராக மட்டும் இன்றி, நடிகராகவும் ரசிகர்கள் மனதில் நிலைக்க செய்தது.

அந்த வரிசையில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'முந்தானை முடுச்சி' திரைப்படம். இந்த படத்தில், பாக்யராஜுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். ஏ.வி.எம் புரோடக்ஷன் தயாரித்திருந்த இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி, 37 வருடம் ஆகும் நிலையில்... இந்த படத்தை தற்போது ரீமேக் செய்வதற்கான முயற்சியில் பாக்யராஜ் இறங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

 பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில், நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

'முந்தானை முடுச்சி' படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆனாலும், இந்த படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் சீன்  தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ். 10 வருடங்களுக்கு பின் மீண்டும் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.